Published:Updated:

`உங்க ஊருக்கும் வருகிறது திருச்சி சிறைச்சாலை செங்கரும்பு!’- அரசின் முடிவால் சிறைவாசிகள் உற்சாகம்

கரும்பு பயிர்
கரும்பு பயிர்

விவசாய விளைபொருள்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் தொகையில் 40 சதவிகிதம், சிறையின் நலத் திட்டங்களுக்கும் 40 சதவிகிதம், சிறை நிர்வாகச் செலவினங்களுக்கும் 2 சதவிகிதம் சிறைவாசிகளுக்குச் சம்பளமாகவும் வழங்கப்படுகிறது.

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட சுமார் 1,500 -க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனைக் கைதிகளாக இருப்பவர்கள் 600 பேர்.

கரும்பு
கரும்பு

அதில், கைதிகளின் நடத்தையைப் பொறுத்து அவர்களை அட்டை தயாரிக்கும் தொழில், புக் பைண்டிங், ஆடு மாடு வளர்த்தல், இனிப்பு தயாரித்தல், உணவு தயாரித்தல், ஆடை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்திவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நன்னடத்தைக் கைதிகளால் ஃப்ரீடம் உணவகம் செயல்பட்டு வருகிறது. அதற்கும் மக்களிடம் ஏக வரவேற்பு.

திருச்சி சிறையில் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் விவசாயப் பணிகளில் மிக ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள 1¼ ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு விளைந்து நிற்கிறது. மேலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதால், செங்கரும்புக்கு மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல், திருச்சி மத்திய சிறையில் விளைந்து நிற்கும் செங்கரும்பு, தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகத் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுக்க விநியோகம் செய்ய இருப்பதால், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

`உங்க ஊருக்கும் வருகிறது திருச்சி சிறைச்சாலை செங்கரும்பு!’- அரசின் முடிவால் சிறைவாசிகள் உற்சாகம்

இதுகுறித்துப் பேசிய சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், “திருச்சி மத்திய சிறையில் காலியாகக் கிடந்த நிலங்களைச் சீர்செய்து, விவசாயப் பயன்பாட்டிற்காக உபயோகித்து வருகிறோம். அந்தவகையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி தோட்டத்தில், நன்னடத்தை அடிப்படையில் உள்ள தண்டனைக் கைதிகள் செய்திடும் விவசாயப் பணிகளின் பலனாய், தற்போது சின்ன வெங்காயம், கத்தரி, வெண்டை, புடலை, மரவள்ளிக்கிழங்கு, அவரை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், மொத்த நிலத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டு, 800 -க்கும் மேற்பட்ட மாமரங்கள், சுமார் 110 முந்திரிச் செடிகளையும் பராமரித்துவருகிறோம். இதுமட்டுமல்லாமல், மழைநீர்சேகரிப்பு குட்டையில் 4,500 -க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் பராமரிக்கப்பட்டுவருகிறது.

`எங்களை ஒதுக்கி வச்சுட்டு வியாபாரிகளிடம் வாங்கிட்டாங்க!' -விவசாயிகளைக் கலங்கடித்த `கரும்பு ஊழல்'

கடந்த இரண்டு வருடங்களாக, செங்கரும்பு பயிரிட்டு வருகிறோம். இந்த வருடம் சுமார் 1¼ ஏக்கர் நிலத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளோம். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட செங்கரும்பு, தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. அந்தவகையில், விளைந்துள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான செங்கரும்புகளை தமிழகஅரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின்மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதற்காக, சுமார் 6 அடி நீளமுள்ள செங்கரும்பு, 21ரூபாய் என தமிழக அரசே விலை கொடுத்து வாங்குகிறது. இதுமட்டுமல்லாமல், மீதமுள்ள கரும்பு, சிறைச்சாலை முன்பு உள்ள அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். தற்போது அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் பிப்ரவரி மாதம் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரங்களையும் விட்டு, மீண்டும் கரும்பு சாகுபடி செய்ய உள்ளோம்.

`உங்க ஊருக்கும் வருகிறது திருச்சி சிறைச்சாலை செங்கரும்பு!’- அரசின் முடிவால் சிறைவாசிகள் உற்சாகம்

தோட்டத்தில் நன்னடத்தைப் பணியில் உள்ள சிறைவாசிகள், தற்போது வெளிக்குழுவிலும் வேலைசெய்கிறார்கள். தமிழக அரசு, தற்போது அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்தவெளி தோட்டம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. திறந்த வெளித் தோற்றத்தில், ஒரு நாள் வேலைசெய்தால், தண்டனைக் கைதிகளின் தண்டனையிலிருந்து ஒருநாள் கழிக்கப்படும் என்பதால் சிறைவாசிக மிக ஆர்வமாக ஈடுபாட்டுடன் பணியாற்றுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் தொகையில் 40 சதவிகிதம், சிறையின் நலத் திட்டங்களுக்கும் 40 சதவிகிதம், சிறை நிர்வாகச் செலவினங்களுக்கும், இரண்டு சதவிகிதம், சிறைவாசிகள் வேலை செய்வதற்கு உரிய ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புறத்தில் இருந்தும் சிலர் வந்திருப்பதால், அவர்கள் திருந்தி சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கான வழியாக இயற்கை விவசாயப் பணி உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு