Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 9 | பல்லுயிர் ஓம்பும் அமரதனின் `காட்டு விவசாயம்’!

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - அமரதன்
திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - அமரதன்

நாம் கவனிக்க வேண்டியது பயிர்களை அல்ல... பல்லுயிர் பெருக்கத்தைத்தான் என்ற நிலைக்கு வந்தடைந்தார் அமரதன்.

அமரதன் குறித்த முந்தைய எபிசோடு:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 8 | ‘காட்டு விவசாய’த்தின் முன்னோடி அமரதன்! இவர் செய்த சாதனை என்ன?
காட்டு விவசாயத்தின் முதல் முயற்சியிலேயே கரும்பிலும் மஞ்சளிலும் பெரு விளைச்சல் எடுத்தார் அமரதன்.

பூச்சிகளும் விவசாயத்தின் ஒரு அங்கம். பயிர் என்பது மிகவும் உயிர்ப்பானது. எதிரிகளிடமிருந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் இயல்பாகவே பயிர்களுக்கு உண்டு. அதை அறியாமல் நாம் செயற்கையாக ரசாயனங்களை பயிர்களின் மேல் கொட்ட, நிலமும் பயிரும் படிப்படியாக சுய ஆற்றலை இழந்துவிடுகின்றன. தன் சுய திறனை இழந்து நிற்கும் பயிர்களைப் பூச்சிகள் எந்த எதிர்ப்புமின்றி சர்வ சாதாரணமாக அழிக்கின்றன. பூச்சிகளை அழிக்க மேலும் மேலும் விஷங்களையும் ரசாயனங்களையும் கொட்டும்போது நிலம் பாழ்பட்டுப் போகிறது. விளையும் உணவு விஷமாகிவிடுகிறது. எது நடந்தாலும் சரி என்னும் தைரியத்தில் வண்டுத் துளைப்பான் பூச்சிகளை கண்டுகொள்ளாமல் விட்டதன்மூலம் வேளாண்மையின், இயற்கையின் தனித்தன்மைகளைக் கற்றுக்கொண்டார் அமரதன்.

அடுத்து கத்திரி பயிரிட்டார். வழக்கமாக, காய்கறிகளில் கத்திரியில்தான் அதிகப் பூச்சித்தாக்குதல் இருக்கும். விளைச்சல் நேரத்தில் வாரத்துக்கு இரண்டுமுறை பூச்சிகளை அழிக்க விஷம் தெளிப்பார்கள். கத்திரி பயிரிடும்போது, "இதெல்லாம் உனக்குச் சரியா வராது... பூச்சி மருந்து அடிக்கலேன்னா ஒரு காய் தேறாது" என்றார்கள் 'அனுபவமுள்ள' விவசாயிகள். ஆனால் அமரதன் மனம்தளர வில்லை. 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்தார். அதிலும் தண்டுத்துளைப்பான் வேலையைக் காட்டியது. அதை அப்படியே விட்டார். கூர்ந்து நிலத்தைக் கவனித்தார். தண்டுதுளைப்பான் அதிகரிக்க அதிகரிக்க அதைச் சாப்பிடும் பூச்சிகளும் அதிகரித்தன. தண்டு துளைப்பான் அரித்த செடிகளில் கூடுதல் கிளைகள் வெடித்தன. பூக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைச்சலும் எக்குத்தப்பாகக் கிடைத்தது.

அமரதன் - காட்டு விவசாயம்
அமரதன் - காட்டு விவசாயம்

இதிலிருந்து இன்னொரு பாடத்தைக் கற்றுக்கொண்டார் அமரதன். நாம் நிலத்தை செயற்கை ரசாயனங்களைக் கொட்டி தொந்தரவு செய்யாமல் இருக்கும்பட்சத்தில், பயிர்களுக்குப் பாதகம் செய்யும் பூச்சிகள் உருவானால் அதைச் சாப்பிடும் நல்ல பூச்சிகளும் இயற்கையாகவே உருவாகிவிடும். நாம் கவனிக்க வேண்டியது பயிர்களை அல்ல... பல்லுயிர் பெருக்கத்தைத்தான் என்ற நிலைக்கு வந்தடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கையிடம் சரணடைந்தால் அது நிறைய கற்றுக்கொடுக்கும். நிராயுதபாணியாக அதன் காலடியில் வீழ்ந்தால் தலைகோதி ஆராதித்து புதிய புதிய தரிசனங்களை தரும். அமரதனுக்கு அப்படியான அனுபவம் வாய்த்தது.
அமரதன்
அமரதன்

"நிலத்துல பல்லுயிர் எந்த அளவுக்கு வளமா இருக்கோ அந்த அளவுக்கு பயிர் நல்லா வளரும். இது எல்லா பயிருக்கும் பொருந்தும். இது நான் கண்டடைந்த உண்மை. பூச்சியில வெஜிடேரியன் பூச்சி, நான்-வெஜிடேரியன் பூச்சின்னு ரெண்டு வகையிருக்கு. பயிர்களை அழிக்கிறது வெஜிடேரியன் பூச்சி. அந்தப்பூச்சியை சாப்பிடுறது நான்-வெஜிடேரியன் பூச்சி. நல்ல பூச்சிகள் நிலத்துல உயிரோட இருக்கனும்னா கெட்ட பூச்சிகளும் உயிரோட இருக்கனும். காட்டுல புலிகள் வாழனும்னா எப்படி மான்கள் இருக்கனுங்கிறாங்களோ அப்படித்தான் இதுவும். அதனால பயிருக்குப் பாதகம் பண்ற பூச்சி நிறையா இருக்கேன்னு கவலைப்பட வேண்டியதில்லை. அந்தப்பூச்சிகளை அழிக்க இயற்கையாவே நல்ல பூச்சிகள் வந்திடும். பல்லுயிர் சமன்பாடு இதுதான். அதனால விவசாயிகள் பூச்சிகளைப் பத்தி கவலைப்படவேகூடாது. பல்லுயிர் மேல கைய வச்சுட்டீங்கன்னா நிலம் பாழாகிடும். தீமை செய்யிற பூச்சியைக் கொல்லனும்ன்னு முடிவு பண்ணி விஷத்தைக் கொட்டினா. அது நன்மை செய்ற பூச்சிகளையும் கொண்ணுடும். பல்லுயிர் சமன்பாடு அழிஞ்சிடும். நிலம் வீணாகிடும்" என்கிறார் அமரதன்.

ரொம்பக் காலம் விஷங்களையும் ரசாயனங்களையும் கொட்டி மண்ணை மலடாக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டே தவறு என்கிறார் அமரதன். எவ்வளவு ரசாயனங்களைக் கொட்டி பாழ்படுத்தப்பட்ட மண்ணாக இருந்தாலும் தன்னைத்தானே அது மாற்றிக்கொள்ளும் என்கிறார் அமரதன்.
காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்

"நீங்கள் உங்கள் வீட்டில் காங்கிரீட் போடப்பட்ட இடத்தில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவிவிட்டுப் பாருங்கள்... உடனே எறும்புகள் வரும்... அந்த சர்க்கரையை சுமந்து செல்கிற எறும்புகள், அந்த காங்கிரிட்டீலேயே சிறு துவாரத்தைப் பறித்து உள்ளே சென்று சேமிக்கும். அவ்வளவு கடினமான காங்கிரீட்டையே உடைத்து உள்ளே நுழையும் ஆற்றல் எறும்புக்கு உண்டு. நிலத்தில் நாம் எரு, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் என்று எதைப் போட்டாலும் அது பல்லுயிருக்கான தீனிதான். அவை அதைச்சாப்பிட்டு மண்ணைக்கிளறி வளப்படுத்தும். விஷங்களைக் கொட்டி அந்தப் பல்லுரியிரிகளை அழித்துவிட்டால் மண் இயற்கைச் சமநிலையை இழந்துவிடும்" என்கிறார் அமரதன்.

திருச்சி ஊர்ப் பெருமை: "எசன்ஸ் இல்லை, நன்னாரி வேர்தான்!"- 81 ஆண்டுகளாக இயங்கும் பிரம்மானந்தம் சர்பத்
நம்மாழ்வார், பாலேக்கர் என இயற்கை விஞ்ஞானிகளிடம் பாடம் கற்ற அமரதன். தன் சுய தேடலால் அடுத்த கட்டத்துக்கு வந்து நிற்கிறார்.
அமரதன்
அமரதன்

"பாலேக்கரிடம் பயிற்சி பெற்று வந்தபிறகு எல்லோரும் நாட்டு மாடுகளைத் தேடத் தொடங்கினார்கள். ஏனென்றால் இயற்கை விவசாயம் நாட்டு மாடுகளை வைத்துத்தான் செய்யவேண்டும். எங்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருந்தன. நாட்டுமாடுகளை பராமரிப்பது மிகவும் சிரமமமான வேலையாக இருந்தது. புதிதாக வேளாண்மை செய்ய வருபவர்களுக்கு மாடுகளைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல் புரியவில்லை. பாலேக்கர், 1 நாட்டு மாடு இருந்தால் 30 ஏக்கர் விவசாயம் செய்யலாம் என்றார். ஒரு நாட்டு மாட்டைத் தேடுவதே பெரிய விஷயமாக இருந்தது. அதை பராமரிக்கும் செலவும் அதிகம்.

விவசாயம் என்பது லாபகரமாக இல்லாமல் போனதற்குக் காரணம், நாம் செய்யும் தேவையற்ற செலவுகள்தான். விவசாய செலவில் பெரும்பகுதி மாடுகளைப் பராமரிப்பதற்காக செலவிடவேண்டியிருக்கிறது. மாட்டுக்குத் தீனி சேகரிப்பதற்காகவே விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுபற்றி தீவிரமாக சிந்தித்தேன். விவசாயத்தின் அடிப்படையே பல்லுரியிகளை வளர்ப்பதுதான்; மாடு ஏன் வளர்க்கிறோம்... அது எரு தருகிறது. அதை வயலில் போட்டால் பல்லுரியிரிகள் அதைத் தின்று செரித்து மண்ணை வளப்படுத்துகின்றன. ஆனால் மாட்டுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பல்லுரியிரிகளுக்கு ஏன் எருவைத் தீனியாகத்தரவேண்டும்... நெற்பயிரை அறுத்து நெல்லைப் பிரித்துவிட்டு அதன் தோகையை அப்படியே நிலத்திலேயே போட்டேன். தோகையை பிரித்து நிலத்திலேயே போட்டுவிட்டு கரும்பை மட்டும் வெளியே எடுத்துவந்தேன். கடலையை பிடுங்கி செடியை நிலத்தில் போட்டேன் .. எல்லாம் மக்கி பல்லுரியிரிகளுக்கு உணவானது. நன்றாக சாப்பிட்டு நிலத்தை அகழ்ந்து வளப்படுத்தின பூச்சிகள்.

காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்

நாம் மண்புழுவை மட்டும்தான் விவசாயிகளின் நண்பன் என்கிறோம். கரையான் , கட்டெறும்பு, பூரான், தேள் என ஏராளமான பல்லுரியிரிகள் உள்ளன. இந்த உயிரிகளின் தன்மை என்னவென்றால் எல்லாமே வெளியில் கிடைப்பதைத் தின்றுவிட்டு மண்ணைத் துளைத்து உள்ளே வாழும். அதனால் மண் பொழிவு பெறும். பயிர்கள் எளிதாக வேர் பரப்பும். தேவையான சத்துகளை பயிரே எடுத்துக்கொள்ளும். எந்த உதவியும் இல்லாமல் தன் பலத்தில் வளரும் ஒரு பிள்ளை வலுவாக வளருமல்லவா... அதைப்போலத்தான் பயிர்களும். போதிய தீனியை மட்டும் பல்லுரியிகளுக்குக் கொடுத்துவிட்டால் நிலத்தை வளப்படுத்துவதை பல்லுயிர் பார்த்துக்கொள்ளும்.

திருச்சி கோயில்கள் - 10: வாழையடி வாழையாகக் குலம் தளைக்கும்... திருப்பைஞ்ஞீலி மகாதேவர் மகிமைகள்!

மாட்டுக்கோ, ஆட்டுக்கோ கொடுத்து தின்று செரித்து, கழிவுகளாக வெளிவந்து அதை அள்ளிக்கொண்டு போய் நிலத்தில் கொட்டுவது செலவும் காலதாமதமாகவும் ஆகும். விளைந்ததை அறுத்துவிட்டு நமக்குத் தேவையான தானியங்களை எடுத்துக்கொண்டு பயன்படாதவற்றை அப்படியே வயலில் போட்டுவிட்டால் வேலை எளிது. இன்னொன்று, ஆட்டுக்கோ, மாட்டுக்கோ சுயமாக தன் உணவைத் தேடிக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. நீங்கள் உணவளிக்க வேண்டியதில்லை. பல்லுரியிர் பெருக்கமும் பாதிக்காது..." என்கிறார் அமரதன்.

அமரதன்
அமரதன்
அமரதன் செய்த அடுத்தடுத்த முயற்சிகளும் அவருக்கு கைமேல் பலன் தந்தன. அடுத்தவாரம் அதுபற்றிப் பார்ப்போம்!
அடுத்த கட்டுரைக்கு