Published:Updated:

விதவிதமாக குவிந்த பேரீச்சம்பழங்கள்; அமீரகத்தில் களைகட்டிய பேரீச்சை திருவிழா!

பேரீச்சை திருவிழா
பேரீச்சை திருவிழா

உலகில் பேரீச்சை விவசாயம் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று. பேரீச்சை விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும், அமீரகத்தின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பேரீச்சை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியின் லிவா மற்றும் ஷார்ஜாவின் அல் தைத் ஆகிய பகுதிகளில் பேரீச்சை திருவிழாக்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் திருவிழாக்கள் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகமாகக் கவர்ந்தன.

பேரீச்சை
பேரீச்சை
Vikatan

உலகில் பேரீச்சை விவசாயம் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று. பேரீச்சை விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும், அமீரகத்தின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பேரீச்சை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

பாலைவனத்தில் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவை பேரீச்சை மரங்கள். அமீரகத்தின் பாரம்பர்யத்தில் பேரீச்சம் பழங்கள் மிகவும் இன்றியமையாதவை. பல நூற்றாண்டுகளாக அமீரக மக்களின் வாழ்வில் ஒன்றாகக் கலந்துவிட்டன பேரீச்சைகள். அப்படிப்பட்ட பேரீச்சையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதே இந்தத் திருவிழாவின் நோக்கம்.

பேரீச்சை
பேரீச்சை
Vasha Hunt

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி அமீரகத்தில் உள்ளது அல் தப்ரா பிராந்தியம். இந்தப் பிராந்தியத்தில் உள்ள லிவா என்ற ஊரில் ஒவ்வொரு ஆண்டும் பேரீச்சை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற 17-வது பேரீச்சம் பழத்திருவிழா, கடந்த 15-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நடந்தது. இந்தத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அபுதாபி கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பர்ய விழாக்களுக்கான குழு செய்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமீரக துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரி ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் ஆதரவுடன் இந்தத் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி 11 பேரீச்சை அழகு போட்டிகள், மாம்பழம், எலுமிச்சை உள்ளிட்ட 7 பழ வகை போட்டிகள், சிறந்த பேரீச்சை பண்ணைக்கான போட்டி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகள் விவசாயிகளை உற்சாகப்படுத்தின.

விவசாயிகளுக்கு பரிசு
விவசாயிகளுக்கு பரிசு

இந்தத் திருவிழாவில் கலாஸ், டுபாஸ் உள்ளிட்ட 22 வகையான பேரீச்சைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தேர்வு செய்யப்பட்ட பேரீச்சை விவசாயிகளுக்கு 8.2 மில்லியன் திர்ஹாம் மதிப்பில் 253 வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு இந்தத் திருவிழாவில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாகப் பொதுமக்கள் நேரடியாகப் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பார்வையிட வசதி செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மட்டும் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் பங்கேற்றனர்.

இதேபோல, ஷார்ஜாவின் அல் தைத் நகரில் உள்ள கண்காட்சி மையத்தில் கடந்த ஜூலை 22-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நான்கு நாட்கள் சிறப்பாக நடந்தது பேரீச்சை திருவிழா. `ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' இந்தத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பேரீச்சை திருவிழா
பேரீச்சை திருவிழா
Vikatan

இந்தத் திருவிழாவில் பேரீச்சை விவசாயிகள் தங்களது பண்ணைகளில் விளைவித்த பேரீச்சைகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் தேன் உற்பத்தியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தத் திருவிழாவை 20 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பார்வையிட்டனர்.

கருத்தரங்கு

இந்த இரண்டு திருவிழாக்களிலும் பேரீச்சை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்புக் கருத்தரங்குகள் வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டன. அதில் பேரீச்சை விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பேரீச்சை திருவிழா
பேரீச்சை திருவிழா

தங்களுக்கு எழுந்த சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தனர். இதன் மூலம் பேரீச்சை விவசாயம் மேலும் அதிகரிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- சமிஹா, ஷார்ஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு