Published:Updated:

கேரளா... மிளகு பிரித்தெடுக்கும் கருவி! தமிழ்நாடு... நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்!

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்

கருவி

கேரளா... மிளகு பிரித்தெடுக்கும் கருவி! தமிழ்நாடு... நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்!

கருவி

Published:Updated:
நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்

ஒவ்வொரு கருவியும் விவசாயிகளுக்குப் பயனுள்ள தாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை நாம் பார்க்கும் கருவி ‘மிளகு பிரித்தெடுக்கும் கருவி’ (Pepper thresher Machine). மிளகைப் பொறுத்துவரை அறுவடைக்குப் பிறகு ஆட்களை வைத்து கை களால் பிரித்து, காய வைத்து சேமிக்கின்றனர். இது கூடுதல் வேலையைக் கொண்டு வரு கிறது. இதற்கு எளிமையான வழியைக் காட்டுகிறது இந்தக் கருவி.

விவசாயத்தில் ஆள் பற்றாக் குறை முக்கிய பிரச்னையாக இருந்து வரும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கருவி மிகவும் உபயோகமாக இருக்கும்.

மிளகு பிரித்தெடுக்கும் கருவி!
மிளகு பிரித்தெடுக்கும் கருவி!

இந்த மிளகு பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் கேரளாவைச் சேர்ந்த கோபால கிருஷ்ண சர்மா. இவர் காசர்கோட்டைச் சேர்ந்தவர். இவரை எனக்கு எப்படித் தெரியும் என்றால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் வேளாண் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அப்போது சர்மாவும் தான் கண்டுபிடித்த கருவியைக் காட்சிக்கு வைத்திருந்தார். அந்தக் கண்காட்சியில் மிளகு பிரித்தெடுக்கும் இந்தக் கருவி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதைப் பற்றி அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிகையில் எழுதினேன். நல்ல வரவேற்பு.

மிளகு பிரித்தெடுக்கும் கருவி!
மிளகு பிரித்தெடுக்கும் கருவி!

வழக்கமாக அறுவடை செய்த மிளகுக் கொத்திலிருந்து மிளகு மணிகளை ஆட்கள் வைத்துதான் பிரித்தெடுப்பார்கள். மிளகில் எப்போதும் மிளகு மணிகளை உடனடியாகப் பிரித்தெடுத்து விட வேண்டும். இல்லையென்றால், அதன் தரம் பாதிக்கப்படும்.

இந்தச் சமயத்தில்தான் ஒரு பி.வி.சி குழாய், 4 இரும்பு ராட்ஸ், டிரம் ஆகியவற் றைக் கொண்டு இந்தக் கருவியை உருவாக்கி யிருக்கிறார். டிரம்மை வளைத்து அதில் குழாயை செருகி 0.5 ஹெச்.பி திறனுள்ள மின் மோட்டாரில் இணைத்து இந்தக் கருவியை இயக்கியிருக்கிறார். கருவியுடன் ஒரு பிளேட்டை இணைத்துப் பிரிக்கப்படும் மிளகு மணிகள் வெளியேறுவதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பிரிக்கப் பட்டு விழும் மணிகளைச் சேகரிப்பதற்கு ஒரு கன்டெய்னரையும் பொருத்தி கருவியைத் தயார் செய்துவிட்டார்.

கோபால கிருஷ்ண சர்மா
கோபால கிருஷ்ண சர்மா

இந்தக் கருவி குறித்து கோபால கிருஷ்ண சர்மா சொல்வதைக் கேட்போம். “இந்தக் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மிளகை பிரித்தெடுத்துவிடலாம். ஓர் ஆள் பிரித்தெடுப்பதென்றால் 6 மணி நேரம் ஆகும். இதில் அனைத்து மிளகு ரகங்களையும் பிரித்தெடுக்கலாம். மிளகின் அளவு இதற்கு ஒரு தடையில்லை. அனைத்தையும் இந்தக் கருவி மூலம் பிரித்தெடுத்து விடலாம்” என்கிறார்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ள இந்தக் கருவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் விலை சுமார் 10,000 ரூபாய். இதிலேயே கூடுதல் அம்சங்கள் கொண்ட கருவிகளும் கிடைக் கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்காகக் கேரள அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டிலும் நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொடைக் கானல், கொல்லிமலை, ஏற்காடு, ஏலகிரி போன்ற பகுதிகளிலும் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. அந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புக்கு,

Gopala Krishna Sharma, Saravu House, Padre P.O, Perla (Via.), Kasaragod. Phone: 09446655218, 04998225100.

நசியனூர் மோகனசுந்தரம்.
நசியனூர் மோகனசுந்தரம்.

நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் கருவி

நிலக்கடலை பிரித்தெடுப்பதில் இன்னும் பழைய முறையையே பின்பற்றி வருகிறோம். திண்டிவனம் பகுதியில் செல்லும் போதெல்லாம் அந்தப் பகுதியில் நிலத்தில் பெண்கள் கூட்டமாக அமர்ந்துகொண்டு நிலக்கடலையைக் கைகளால் பிரித்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். 100 - 120 நாள்களில் அறுவடையாகும் நிலக்கடலையைப் பிரித்தெடுக்க நிலக்கடலை பிரித்தெடுக்கும் கருவிகள் நிறைய வராத காலத்தில், தனக்குக் கிடைத்த ஒரு கருவியில் சில அம்சங்களைச் சேர்த்து மேம்படுத்திப் பயன்படுத்தி வந்தார், சமீபத்தில் மறைந்த, முன்னோடி இயற்கை விவசாயி நசியனூர் மோகனசுந்தரம். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் கருவி
நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் கருவி

மைராடா கேவிகேவியின் உதவியோடு இந்தக் கருவியை வடிவமைத்திருந்தார். இரண்டு ஆட்கள் நின்றுகொண்டு எளிதாக இந்தக் கருவியைக் கையாளலாம். உருளை வடிவிலான அமைப்பில் மூன்று திறந்த பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் மூடியிருக் கும். மேற்புறம் உள்ள திறந்த அமைப்பில் அறுவடை செய்த கடலைக் கொடியைக் கைகளால் பிடித்துக் கொண்டு உருளை வடி விலான அமைப்பில் காட்டினால் அடியிலிருக்கும் திறந்த பகுதி வழியாகக் கடலைகளை உரித்துக் கீழே தள்ளிவிடும். மண், தூசு உள்ளிட்டவற்றை மற்றொரு திறந்த பகுதியில் வெளியே வந்துவிடும். 0.25 ஹெச்.பி திறனுள்ள மோட்டாரில் இது இயங்குகிறது. 60 சதவிகித ஆட்கள் பயன்பாட்டை இந்தக் கருவி மிச்சப்படுத்து கிறது. இதன் விலை சுமார் 20,000 ரூபாய். இந்தக் கருவியின் எடை 35 கிலோதான். அதனால் நிலத்தில் எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்லலாம்.

இந்தக் கருவி தமிழ்நாடு அறிவியல் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புக்கு,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி: 04285 241626