Published:Updated:

12 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை; வெள்ள எச்சரிக்கையுடன் உபரி நீர் திறப்பு!

வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர்
வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால், வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதுடன், உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன், கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களில் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியபோது கரையோரங்களில் வசித்து வரும் மக்களுக்கு `முதல்கட்ட’ வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கடல் போல் காட்சி அளிக்கும் வைகை அணை
கடல் போல் காட்சி அளிக்கும் வைகை அணை
12 ஆண்டுக்குப் பிறகு பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட வைகை அணை! #PhotoCollection

மேலும் கடந்த 25-ம் தேதி 68.50 அடியை எட்டிய போது `இரண்டாவது கட்ட’ வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 69 அடியாக உயரும்போது அணையில் இருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படும் என, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் வைகை அணை கரையோர மக்களுக்கு மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அணையின் மதகுகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இயக்கி, உபரி நீரை வெளியேற்றினார். ஏற்கனவே விவசாயத்திற்கு 960 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்
தேனி: 66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தற்போது வெளிவரும் உபரி நீரையும் சேர்த்து 1,750 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. அதேபோல, 12 ஆண்டுக்குப் பிறகு வைகை அணையில் இருந்தும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும், இந்தாண்டு கடந்த ஜூன் மாதமே முதல் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு