Published:Updated:

விலை முன்னறிவிப்பு : பூவன் 20 ரூபாய், கற்பூரவள்ளி 22 ரூபாய், நேந்திரன் 35 ரூபாய்!

வாழைப்பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழைப்பழம்

நேந்திரன் மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து வருகிறது. கொரோனா தொற்று தாக்கத்தால் வாழைக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.

மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வாழை விலைக்கான முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்த முன்னறிவிப்பில், இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் ஆகியவை வாழை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கரூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. வாழை, திருச்சியிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதி சந்தைகளுக்கு அனுப்பப்படுவதால் இது மாநிலத்தின் முக்கிய மையமாகச் செயல்படுகிறது. தற்போது திருச்சி சந்தைக்கு வாழை வரத்தானது புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் ஆந்திராவிலிருந்து வருகிறது.

கோயம்புத்தூர் சந்தைக்குப் புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் இருக்கிறது.

நேந்திரன் மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து வருகிறது. கொரோனா தொற்று தாக்கத்தால் வாழைக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.

வாழைப்பழம்
வாழைப்பழம்

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வு முடிவின் அடிப்படையில், மாநிலத்தின் முக்கிய சந்தைகளில் ஆகஸ்ட் மாதம் வரை பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், கற்பூரவள்ளி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையும், நேந்திரன் விலை கிலோவிற்கு 32 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பருவமழை மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் விழாக்களுக்குத் தளர்வு அளிக்கப்படுவதைப் பொறுத்து விலை மாறுபடும். இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு,

வேளாண் மற்றும்

ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தொலைபேசி : 0422 2431405