Published:Updated:

இரும்பு பாலங்களைவிட வலிமையான உயிருள்ள மரப்பாலங்கள்... இவை எந்த மரத்தால் ஆனவை தெரியுமா?

மரப்பாலம்

உலகிலேயே உயிருள்ள மரத்தின் வேர்களைக் கொண்டு பாலம் அமைந்திருப்பது இங்குதான். வழக்கமாக மரத்தை வெட்டி அதன் பலகைகளைத்தான் பாலம் அமைக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மரப்பாலங்களை உருவாக்கியதில் அந்தப் பகுதி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரும்பு பாலங்களைவிட வலிமையான உயிருள்ள மரப்பாலங்கள்... இவை எந்த மரத்தால் ஆனவை தெரியுமா?

உலகிலேயே உயிருள்ள மரத்தின் வேர்களைக் கொண்டு பாலம் அமைந்திருப்பது இங்குதான். வழக்கமாக மரத்தை வெட்டி அதன் பலகைகளைத்தான் பாலம் அமைக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மரப்பாலங்களை உருவாக்கியதில் அந்தப் பகுதி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Published:Updated:
மரப்பாலம்

வழக்கமாக ஆற்றையோ, ஓடையையோ கடக்க வேண்டுமென்றால் சிமென்ட்டால் ஆன பாலம் கட்டுவார்கள். அல்லது பரிசல், படகில் ஆற்றைக் கடப்பார்கள். இதற்கு மாறாக மரங்களின் வேர்களைக் கொண்டு பாலத்தை அமைத்து பயன்படுத்தி வருகிறார்கள் மேகாலயா மாநில மக்கள். இந்தியாவில் மேகாலயா மரப்பாலங்களுக்கு பிரசித்திபெற்ற இடமாக இருக்கிறது. மேகலயாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மரப்பாலங்கள் இருக்கின்றன.

Double Root Bridge
Double Root Bridge
Photo by Utkarsh B on Unsplash

அவற்றில் சோரா Sohra (சிரபுஞ்சி), நொங்பெர்க், (Nonberg) நொங்கிரியாட் (Nongriat) காசி மலைத்தொடர் போன்ற இடங்களில் உள்ள மரப்பாலங்கள் முக்கியமானவை.

காசி மலைத்தொடரில் உள்ள மரப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் ஆனது. காசி மலைத்தொடரில் உள்ள பாலத்தை உயிருள்ள மரப்பாலம் (living roots) என்று அழைப்பர். ஏனென்றால் இந்திய வகை மரமான பைகஸ் எலாஸ்டிகா (Ficus elastica) என்ற உயிருள்ள மரத்தால் இந்தப் பாலத்தை மேகாலயா பழங்குடியினர் கட்டி எழுப்பினர். பைகஸ் எலாஸ்டிகா மரம் தன்னுடைய இரண்டாம் கட்ட வேர்களை விரிவு படுத்த சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இந்த மரப்பாலம் 1840-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது 30 மீட்டர் நீளமுடையது. சமீபத்தில் இது 50 முதல் 100 அடி வளர்ந்துள்ளதாக தகவல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பைகஸ் எலாஸ்டிகா மரப்பாலம் விழாமல் இருக்க மற்ற மரங்களை ஆரம்பத்தில் சப்போர்ட் கொடுக்கப்பட்டது. 15 - 30 ஆண்டுகளுக்கு பிறகு மரப்பாலம் தனித்து நிற்கும் பலத்தை பெற்றது. இந்த மரப்பாலத்தில் காய்ந்த இலைகளை வேர்களின் இடைவெளிகளில் பழங்குடியினர் நிரப்பி வைத்துள்ளனர். அது மக்கி வேர்களுக்கு சத்துகளை அளிக்கிறது.

காசி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த மரப்பாலமானது பழங்குடி கிராமத்து மக்கள் விறகுகளையும் பொருள்களையும் எடுத்து செல்வதற்கு பேருதவியாக இருக்கிறது. பல்வேறு பறவை, விலங்குகள், பாலூட்டிகள், பூச்சிகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மரப்பாலம் உள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பர்ய தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது வருங்கால சந்ததிகள் இயற்கையின் மீது அன்பு கொள்ள உந்துதலாக இருக்கிறது.

மரப்பாலத்தில்
மரப்பாலத்தில்

பைகஸ் எலாஸ்டிகா மரப்பாலம் மட்டுமல்லாமல் சோரா, பாது (Padu) நொங்பெர்கில் உள்ள மரப்பாலங்கள் முக்கியமானவை. சோரா (சிரபுஞ்சி) மரப்பாலமானது 30 முதல் 50 மீட்டர் நீளமுடையது. நொங்பெர்கில் உள்ள மரப்பாலமானது அமயாலி (Amayalee river) நதியையும், உம்ன்காட்(Umngot) நதியையும் இணைக்கிறது. இது நூறு வருடம் பழைமையானது. இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மரப்பாலங்கள் மேகாலயாவில் உள்ளன.

தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையத்தின் உறுப்பினரும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியுமான இஸ்ரேல் ஆலிவர் கிங் சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். தாவரங்களின் வகைகளை ஆவணப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். பயணத்தின் ஒரு பகுதியாக மேகாலயா மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அங்குள்ள மரப்பாலம் பகுதிக்கு சென்றிருந்தார். அதுகுறித்து அவர் நம்மிடம் பேசியபோது, ``உலகிலேயே உயிருள்ள மரத்தின் வேர்களைக் கொண்டு பாலம் அமைந்திருப்பது இங்குதான். வழக்கமாக மரத்தை வெட்டி அதன் பலகைகளைத்தான் பாலம் அமைக்கப் பயன்படுத்துவார்கள்.

இஸ்ரேல் ஆலிவர் கிங்
இஸ்ரேல் ஆலிவர் கிங்

ஆனால், இங்க இரண்டு பக்கமும் உள்ள மரத்தின் வேர்களைக் கொண்டு இந்தப் பாலம் அமைத்திருக்கிறார்கள். இது சூழல் சுற்றுலாவின் ஓர் அங்கமாக உள்ளது. இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் வருமானம் அந்த மரப்பாலம் அமைந்துள்ள ஊரின் கவுன்சிலுக்குச் சென்றுவிடும். அதைக் கொண்டு கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த மரப்பாலங்களை உருவாக்கியவதில் அந்தப் பகுதி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாலங்கள் அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. இங்கு சென்று வந்தது ஓர் அலாதியான அனுபவமாக இருந்தது" என்றார்.