Published:Updated:

நிதி கிடைத்தும்காலதாமதமாகும் கால்நடை மருத்துவனை!

கால்நடை மருத்துவனை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை மருத்துவனை

கால்நடை

நிதி கிடைத்தும்காலதாமதமாகும் கால்நடை மருத்துவனை!

கால்நடை

Published:Updated:
கால்நடை மருத்துவனை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை மருத்துவனை

விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று கால்நடை மருத்துவமனை. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருப்பந்துருத்தி மற்றும் பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பகுதிகளில், புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு நபார்டு வங்கி, கால்நடை பராமரிப்புத் துறைக்கு நிதி வழங்கியது. ஆனால், இதற்கான இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியாலும், அரசியல் தலையீட்டினாலும் கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் காலதாமதமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பந்துருத்தியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ‘‘மேலத்திருப்பந்துருத்தியில புதுசா கால்நடை மருத்துவமனை கட்ட, ஒரு வருஷத்துக்கு முன்னாடி நபார்டு வங்கி, கால்நடை பராமரிப்புத் துறைக்கு 40 லட்சம் ரூபாய் நிதி கொடுத்துச்சு. வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், இந்தப் பகுதி விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து மேலத்திருப்பந்துருத்தியில இடத்தைத் தேர்வு செஞ்சோம். இது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம். 50 சென்ட் பரப்பு. கால்நடை மருத்துவமனை அமைக்குறதுக்கான ரொம்பவே பொருத்தமான இடம்.

சுகுமாறன்
சுகுமாறன்

இடத்தைத் தேர்வு செஞ்சிட்டு வந்த ரெண்டே நாள்ல, சிலர் குடிசை போட்டாங்க, ஆனா அங்க வசிக்கல. நியாயாமா பார்த்தா, வருவாய்த்துறை அதிகாரிகள், அந்தக் குடிசையைக் காலிபண்ணி, அந்த இடத்தைக் கால்நடை பராமரிப்புத்துறைக்கிட்ட ஒப்படைச்சிருக்கணும். ஆனா, இதுல ஏதோ அரசியல் தலையீடுனால, அந்த இடத்தை அப்படியேயே விட்டுட்டு, கீழத்திருப்பந்துருத்தியில வேற இடத்தைத் தேர்வு செஞ்சிருக்காங்க. அது பொருத்தமான இடமில்ல. இதுக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, மக்களோட கருத்தை மாவட்ட நிர்வாகம் கொஞ்சம்கூட மதிக்கல’’ என ஆதங்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘‘கீழத்திருபந்துருத்தியில்தான் முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த இடத்தைத் தேர்வு செய்யவில்லை. கீழத்திருப்பந்துருத்தியில் விரைவாகக் கால்நடை மருத்துவமனை கட்டப்படும்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism