Published:Updated:

‘‘ஒரு செய்தியைப் பல கோணங்களில் அணுகுங்கள்!’’விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!

நாட்டு நடப்பு

‘‘ஒரு செய்தியைப் பல கோணங்களில் அணுகுங்கள்!’’விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!

நாட்டு நடப்பு

Published:Updated:
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!

பத்திரிகையாளர்களாக உருவெடுத்து, இந்தச் சமூகத்திற்குத் தன்னால் இயன்ற பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் மிக்கக் கல்லூரி மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக, ஆண்டுதோறும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாம்!

2022-23-ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தில் பங்குப் பெற, தமிழகம் முழுவதிலும் இருந்து 2,416 மாணவர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 56 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான கூட்டுப் பயிற்சி முகாம், சென்னையில் கடந்த ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது.

 பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “ஒரு செய்தியைப் பல கோணங்களில் அணுகுங்கள். உங்கள் படைப்புகளை வாசகர்கள் ஏற்றுக்கொள்வதுதான் உங்களுக்கான சிறந்த பரிசு’’ என்றார்.

ஷபீர் அஹமது
ஷபீர் அஹமது

‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் பேசிய தி நியூஸ் மினிட் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அஹமது, ‘‘இன்றிலிருந்து மாணவ பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களைப் பலரும் பார்க்கும் கோணம் மாறும். மரியாதை கூடும். களத்திற்குச் சென்று உண்மையை ஆராய்ந்து செய்தியைப் பதிவு செய்யுங்கள். ஆர்வம், தேடலை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ‘செய்தியை தேடுங்கள்’ என்ற தலைப்பில் பேசிய யூடியூபர் மதன் கௌரி, ‘‘வாசகர்களின் தேவையை அறிந்து அதற்கேற்றாற்போல் செய்திகளைக் கொடுங்கள்’’ என்றார்.

சிவபாலன் இளங்கோவன்
சிவபாலன் இளங்கோவன்

‘டிஜிட்டல் காலத்து இளைஞர்கள்’ என்ற தலைப்பில் பிரபல மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் பேசினார். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து பேசிய திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “படிக்கும்போதே மாணவ பத்திரிகையாளர்களுக்கு இவ்வளவு பெரிய அனுபவங்கள் கிடைப்பது, பெரிய விஷயம்” என்றார்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
 ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷிடம் மாணவப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். இந்த இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்குப் பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்களும், விகடன் குழுமத்தின் மூத்த பத்திரிகையாளர்களும் பயிற்சி அளித்தனர்.