மட்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்துவருகிறது நாகர்கோவில் மாநகராட்சி.
இது குறித்த முழு விவரங்களை அறிந்துகொள்ள ஒழுகினசேரியிலுள்ள உரம் தயாரிக்கும் நுண்ணுறைச் செயலாக்க மையத்துக்குச் சென்றோம். பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பகவதி பெருமாளைச் சந்தித்தோம். ‘‘நாகர்கோவில் மாநகராட்சியில் 11 நுண்ணுறைச் செயலாக்க மையங்கள் இருக்கின்றன. வீடுகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரித்துக் கொடுக்கிறார்கள். குப்பைகளைக் கொண்டு வருவதற்காக 63 ஆட்டோக்கள் வைத்திருக்கிறோம். நுண்ணுறைச் செயலாக்க மையத்தில் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரித்து எடைபோட்டுக் கொடுப்பார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மட்காத குப்பையில் வரும் இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றைப் பணியாளர்கள் சேர்த்துவைத்து, பழைய இரும்புக்கடையில் போட்டுவிடுவார்கள். அதில் கிடைக்கும் தொகையைத் தொழிலாளர்களுக்குப் பங்கிட்டு வழங்குகிறோம். பாலித்தீன் பைகளைச் சாலை போடத் தார் தயாரிக்கும் கம்பெனிக்கும், சிமென்ட் கம்பெனிக்கும் அனுப்பிவிடுகிறோம். மட்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், பூக்கள் உள்ளிட்ட கழிவுகளைப் பணியாளர்கள் ஒரு முறை தரம் பிரித்துத் தேவையில்லாத கழிவுகள் கிடந்தால் அகற்றிவிடுவார்கள். பிறகு கன்வேயர் இயந்திரத்தில் போட்டு, கழிவுகளை அரைத்து, உரம் தயாரிக்கும் தொட்டியில் போடுவார்கள். இங்கு 14 தொட்டிகள் அமைத்திருக்கிறோம். ஒரு நாள், ஒரு தொட்டி வீதம் ஏழு நாள்களுக்கு ஏழு தொட்டிகளில் கழிவுகளைச் சேர்ப்போம். அப்படி 21 நாள்கள், மூன்று அடுக்குக் குப்பைகளை ஏழு தொட்டிகளில் சேர்ப்போம்.


அதன் பிறகு அடுத்த ஏழு தொட்டிகளில் கழிவுகளைச் சேர்ப்போம். 42 நாள்களில் முதல் தொட்டியிலுள்ள கழிவுகள் உரமாக மாறிவிடும். அவற்றை விற்பனை செய்கிறோம்’’ என்றவர், கழிவுகளை இயற்கை முறையில் உரமாகப் பக்குவப்படுத்தும் முறையை விளக்கினார். ‘‘கழிவுகளின் மீது இ.எம் கரைசலைத் தெளிக்கிறோம். அதனால் ஈக்கள் வராமலிருக்கும். அதையும் மீறி ஈக்கள் வந்து முட்டையிட்டுப் புழுக்கள் உற்பத்தியானாலும், அதைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மையத்திலும் சுமார் 30 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம். அவை, உரங்களில் உருவாகும் புழுக்களைச் சாப்பிட்டுவிடும். இ.எம் கரைசலை நாங்களே தயாரிப்பதால் செலவு குறைவாக இருக்கிறது. 90 லிட்டர் தண்ணீர், 5 கிலோ வெல்லம், 2 லிட்டர் தயிரை பெரிய பேரலில் கலந்து காற்றுப் புகாமல் மூடிவைத்துவிடுவோம். அது ஒரு வாரத்துக்குப் பிறகு இ.எம் கரைசலாக மாறிவிடும். இ.எம் கரைசலை தினமும் எட்டு லிட்டர் என்ற விகிதத்தில் கழிவுகள்மீது தெளிக்கிறோம்.
36,690 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாகப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். நிறைய பேர் உரம் வாங்குறதால தட்டுப்பாடு இருக்கு. கிலோ ஒரு ரூபாய் விலையில் மண்கூடக் கிடைப்பதில்லை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
சுண்ணாம்பு, பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவதில்லை. தினமும் வேலை முடிந்து செல்லும்போது சாணியும் மஞ்சள் பொடியும் கலந்து தெளித்துவிடுகிறோம்’’ என்றவர், உரம் விற்பனை குறித்து விவரித்தார். “ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். முதற்கட்ட விற்பனையில் 36,690 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை 107 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாகப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். சம்பளம் போக இந்த ஊக்கத்தொகையும் கிடைப்பதால் அவர்கள் உற்சாகமாகப் பணிபுரிகிறார்கள். 11 மையங்களுக்கும் சேர்த்து தினமும் 30,000 கிலோ கழிவுகள் வருகின்றன. முதற்கட்ட உரம் தயாரிப்பதற்கு 96,000 கிலோ கழிவுகள் வந்தன. ஈரம் உலர்ந்துபோவது போன்ற காரணங்களால் எடை குறைந்து 36,000 கிலோ உரம் கிடைத்தது. விவசாயிகள், வீட்டுத் தோட்டம் அமைப்பவர்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். ஐந்து கிலோ கேட்டாலும் கொடுக்கிறோம். உரத்துக்கான தேவை அதிகமாக இருப்பதால் மையத்தில் தேங்குவதில்லை’’ என்றார்.

‘‘நகரின் மொத்த குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டியதால் மலைபோலக் குவிந்தது. இப்போது அந்தந்தப் பகுதிகளிலேயே குப்பைகள் பிரிக்கப்படுவதால் செலவு குறைவாக உள்ளது’’

இது குறித்துப் பேசிய நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ‘‘1990-ம் ஆண்டுவரை ஊருக்குள் இருக்கும் குப்பைக் கிடங்கில் தேங்கும் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினர். அதனால் குப்பைகள் தேங்கவில்லை. அதன் பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததால், உரத்துடன் பிளாஸ்டிக் சேரத் தொடங்கியது. பிளாஸ்டிக் விளைநிலத்தில் சேர்ந்தால் மண் பாழாகிவிடும் என்பதால், விவசாயிகள் உரம் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் குப்பைகள் சேரத் தொடங்கின. குப்பைகளைக் கொட்ட இடம் தேடினால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தந்த பகுதிகளிலுள்ள குப்பைகளை அங்கு வைத்தே தரம் பிரித்து உரமாக்கி விற்கிறோம்.

முன்னர், நகரின் மொத்த குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டியதால் அங்கு மலைபோலக் குவிந்தது. அது மட்டுமல்லாமல் லாரிகளில் குப்பைகளைக் கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்தது. இப்போது அந்தந்தப் பகுதிகளிலேயே குப்பைகள் பிரிக்கப்படுவதால் செலவு குறைவாக உள்ளது’’ என்றார் குரலில் உற்சாகம் தொனிக்க!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறைந்த விலையில் அதிக உரம்!

மாநகராட்சி இயற்கை உரத்தை வாங்கிப் பயன்படுத்திய, நாகர்கோவிலை அடுத்த புல்லுவிளையைச் சேர்ந்த விவசாயி பெரிய நாடாரிடம் பேசினோம். ‘‘எனக்கு 15 ஏக்கர் தென்னைந்தோப்பு இருக்கு. அதுல போடுறதுக்காக மாநகராட்சியில இயற்கை உரம் வாங்கினேன். உரம் தயாரிச்சு, வெளியே வரும்போது ஈரப்பதம் இல்லாம இருக்கு. உலர்ந்த உரம்கிறதால எடை குறைவாக இருக்கு. அதனால குறைஞ்ச விலையில அதிக அளவு உரம் கிடைக்குது. தண்ணீர் விட்டவுடன், உரம் ஈரத்தை உறிஞ்சிவெச்சுக்குது. நல்லா ஈரப்பதத்தைத் தாங்குறதால தண்ணி செலவு குறையுது. இந்த உரம், தென்னை மரத்துக்கு மூடாக்கு மாதிரி பயன்படுது. நான் ஆறு டெம்போ உரம் வாங்கியிருக்கேன். நிறைய பேர் உரம் வாங்குறதால தட்டுப்பாடு இருக்கு. கிலோ ஒரு ரூபாய் விலையில் மண்கூடக் கிடைப்பதில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம் கிடைப்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்’’ என்றார்.