Published:Updated:

பழங்கால இந்திய மக்களின் நீர் மேலாண்மை நுட்பங்கள்!

நீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நீர் மேலாண்மை ( நா.ராஜமுருகன் )

நீர் மேலாண்மை

பழங்கால இந்திய மக்களின் நீர் மேலாண்மை நுட்பங்கள்!

நீர் மேலாண்மை

Published:Updated:
நீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நீர் மேலாண்மை ( நா.ராஜமுருகன் )

ணவு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் நீரின் முக்கியத்துவத்தை உணராத வர்கள் இருக்க முடியாது. அத்தகைய நீரைப் பாதுகாக்கும் முயற்சிகளைவிட, நாட்டின் முக்கிய நீராதாரங்கள் அழிக்கப்படுவதுதான் அதிகம் நடக்கிறது. மேற்பரப்பு நீர் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் வளத்தையும் பெருமளவில் நாம் இழந்து நிற்கின்றோம்.

ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண் டிருக்கும் மழை அளவும் பெய்கின்ற காலகட்டமும் விவசாயத்திலும் சரி பொதுமக்களுக்கான நீர் பயன்பாட்டிலும் சரி, மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதைச் சரிசெய்வதற்குத் திறம்மிக்க நீர் மேலாண்மையை நாம் திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இன்று மட்டுமல்ல, பழங்கால மக்களும் நீர் பற்றாக்குறை முதல் தீவிர வெள்ளச் சேதங்கள் வரை பலவற்றையுமே சந்தித்துள்ளார்கள். அதைச் சமாளிக்க என்றே பல நீர் மேலாண்மை முறைகளைக் கையாண்டுள்ளார்கள். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அங்கிருக்கும் நிலவியல் அமைப்புக்குத் தகுந்தவாறு, அந்த முறைகளை வடிவமைத்துள்ளார்கள்.

ஜாலரா
ஜாலரா

1.ஜாலரா

ராஜஸ்தானில் ஜாலரா என்ற செங்குத்தாக, செவ்வக வடிவத்திலிருக்கும் கிணறு நீர் சேமிப்புக்குப் பயன்படுகிறது. ஏரி, குளம் போன்ற பூமியின் மேற்பரப்பு நீராதாரத்திலிருந்து நிலத்தடியில் வடியும் நீரைப் பிடித்து வைப்பதற்கு வசதியாக இந்தக் கிணறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கிணற்றின் மூன்று பக்கங்களிலும் அடுக்கடுக்காகப் படிகள் அமைக்கப்பட்டிருக்கும். சமூகப் பயன்பாடுகள், பெரிய பெரிய திருவிழாக் கூட்டங்களின் நீர் தேவையைப் பூர்த்திச் செய்வதற்கு, இதில் சேமிக்கப்படும் நீர் பயன் படுத்தப்பட்டது. ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜோத்பூரில் இது மாதிரி 8 ஜாலராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1660-ம் ஆண்டு கட்டப்பட்ட மகாமந்திர் ஜாலரா என்ற கிணறுதான் மிகவும் பழைமையானது.

ஜோஹாத்
ஜோஹாத்

2.ஜோஹாத்

நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் சேகரிப்பு ஆகியவற்றுக்காகக் கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட பழைமையான நீர் மேலாண்மை முறைகளில் இதுவும் ஒன்று. சிறிய அணைக்கட்டைப் போன்ற கட்டமைப்பு இது. மூன்று புறங்களில் மேட்டு நிலமாகக் கட்டப்பட்டிருக்கும். நடுவில் ஆழமாகக் குழிதோண்டி நீர்த்தேக்கம் அமைப்பார்கள். அந்தக் குழியைத் தோண்டும் போது அகழும் மண்ணைப் பயன்படுத்திச் சுற்றியும் சுவர் அமைப்பார்கள்.

இப்படிக் கட்டப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோஹாத்துகளைக் குறுகிய வாய்க்கால்களின் மூலம் ஒன்றாக இணைத் திருப்பார்கள். அந்த வாய்க்காலின் முடிவு ஒரு நதியோடோ ஓடையோடோ இணைக்கப் பட்டிருக்கும்.

பனங்கேணி
பனங்கேணி

3. பனங்கேணி

கேரளாவின் வயநாட்டில் வாழும் குருமா பழங்குடிகளின் தனித்துவமான கிணறுதான் பனங்கேணி. பனைமரத் தண்டுகளை நீரில் நீண்ட நேரம் ஊறவைத்து, கெட்டிப்படுத்தி இந்த மரக் கிணற்றை அமைப்பார்கள். நான்கு மீட்டர் விட்டமும் ஆழமும் கொண்ட இந்த மரத்தொட்டிகளை, காட்டுக்குள்ளும் விவசாய நிலங்களிலும், நிலத்தடி நீர் நன்றாக ஊறும் இடமாகப் பார்த்து, அங்கு குழி தோண்டிப் பொருத்துகிறார்கள். கோடைக்காலங்களிலும் அந்த மரத் தொட்டிகளில் நீர் ஊறிக் கொண்டேயிருக்க இது உதவுகின்றது. அந்த மக்கள் அதில் சேமிக்கப்படும் நீரைத் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பவோலி
பவோலி

4. பவோலி

கிணற்றின் சுவர்களில் கலை வேலைப் பாடுகளோடு, படிக்கட்டுகள் வைத்து பவோலி கிணறுகள் கட்டப்பட்டிருக்கும். இது குடிமை சார்ந்த நீர்ப்பாதுகாப்பு கட்டமைப்பாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் எந்த வேறுபாடுமின்றி அனைத்து மக்களும் பயன் படுத்தலாம். படிக்கட்டுகள் மட்டுமன்றி, சில அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பவோலி கிணறுகள், நீர்ப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், வணிகப் போக்குவரத்து உள்ள பாதைகளில் பயணிகளின் ஓய்விடங் களாகவும் இது பயன்பட்டுள்ளது. மேலும், இங்கு சமூகக் கூடுதல்கள் நிகழ்ந்துள்ளதோடு, இதிலிருக்கும் படிக்கட்டுகளில் வடிகால்கள் அமைத்து, விவசாய நிலங்களுக்கு நீர் அனுப்பவும் வசதி செய்திருந்தனர்.

குல்ஸ்
குல்ஸ்

5. குல்ஸ்

இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதி களில் அமைக்கப்படும் மேற்பரப்பு வாய்க்கால்களே குல்ஸ் என்றழைக்கப் படுகின்றன. ஆறுகள், ஓடைகளிலிருந்து பனிக்கட்டிகள் உருகிய நீராக வரும்போது, அந்தப் பனி நீரை விவசாய நிலங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்க உதவுகின்றன.

கங்க்ரா பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 715 பெரிய குல்ஸ் வாய்க்கால்களும் 2,500 சிறிய குல்ஸ் வாய்க்கால்களும் இருக்கின்றன. அங்குள்ள 30,000 ஹெக்டேர் விவசாய நிலத்ட்துக்குப் பாசனம் வழங்குவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் கட்டப்படும் இதைப் பராமரித்துக் கொள்ள என்று தனியாக ஒருவர் நியமிக்கப் படுவார் என்பது இதன் தனிச்சிறப்பு.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

6. ஏரி

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நீர்மேலாண்மைக்கு ஆதாரம்... ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என்று மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படும் நீர்நிலைகள்தான். ஏரி, கண்மாய் மற்றும் குளங்கள் அனைத்துமே மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும். குளங்கள் எனும்போது சில ஊர்களில் சிறுசிறு அளவிலான பரப்பில் இருப்பதைக்கூட குளம் என்று அழைப்பார்கள். அதேசமயம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் குளம் என்பது ஏரி மற்றும் கண்மாய் அளவுக்கு பரந்துவிரிந்தே இருக்கும்.

இந்த நீர்நிலைகள் அனைத்துமே சங்கிலித் தொடர்போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நீர்நிலை நிரம்பி, அடுத்த நீர்நிலை, அடுத்த நீர்நிலை என்று தண்ணீர் பாய்ந்து கடைசியில் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பதுபோல அமைத்திருப்பார்கள். அதாவது, நிலப்பரப்பின் இயற்கை தன்மைக்கேற்ப இதை உருவாக்கியிருக்கிறார்கள். வெள்ளச் சேதங்களைக் கட்டுப்படுத்தவும், வெள்ளநீரைச் சேமித்து வைக்கவும், மண் அரிப்பு, மழைநீர் சேமிப்பு, நிலத்தடிநீர் சேகரிப்பு என்று பல செயல்பாடுகளை இந்த நீர்நிலைகள் செய்கின்றன. இவை தமிழ்நாட்டில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் தொடர்புபடுத்தப்பட்டு, விவசாய நிலங்களுக்கும் ஊர் மக்களின் பயன்பாட்டுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism