Published:Updated:

நிரம்பிய மேட்டூர் அணை... 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

நிரம்பிய மேட்டூர் அணை... 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு!

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

Published:Updated:
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

சேலம், மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, விவசாய பணிகளுக்கென குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கர் நிலமும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலமும் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றது.

நிரம்பிய மேட்டூர் அணை... 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் 1,15,000 கன அடி நீரும் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களுக்குட்பட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளீட்டோர் சற்று மேடான பகுதிக்குச் சென்று பாதுக்காப்பாக இருக்கும் படியும், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் படியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் காவிரி ஆற்றின் வழியாக அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றாங்கரை ஓரங்களில் பரிசல்களை இயக்கவோ குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காவிரிக் கரையோரங்களில் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, பொதுபணித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது” என்றார்.