Published:Updated:

"இதற்காகத்தான் கேப்சூல் முறையில் நெல் சாகுபடி செய்றேன்!" காரணம் சொல்லும் டெல்டா விவசாயி!

கேப்சூல்

நாற்றங்கால் அமைத்து பயிரிடுவதை விட, நேரடியாக கேப்சூல் முறையில் விதைப்பதால் நேரமும், செலவும் மிச்சமாகிறது.

"இதற்காகத்தான் கேப்சூல் முறையில் நெல் சாகுபடி செய்றேன்!" காரணம் சொல்லும் டெல்டா விவசாயி!

நாற்றங்கால் அமைத்து பயிரிடுவதை விட, நேரடியாக கேப்சூல் முறையில் விதைப்பதால் நேரமும், செலவும் மிச்சமாகிறது.

Published:Updated:
கேப்சூல்

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூர் அக்ரஹாரத் தெருவைச சேர்ந்தவர் ராஜசேகர். இவர் எம் காம்., பி எட்., டி.சி.ஏ., டிசிபிஏ., பி ஜி டி சி எம்., ஐசிடபிள்யூஏ, அக்ரிகல்சர் டிப்ளமோ உள்ளிட்ட பல  பட்டங்களை பெற்றிருந்தாலும் விரும்பி ஏற்றுக் கொண்டது விவசாய தொழிலைதான். கந்தமங்கலம் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார்.

கேப்சூல்
கேப்சூல்

கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய வயலில் கறுப்புக் கவுனி, சீக்ச் சம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவரும்  ராஜசேகர் ஒவ்வொரு முறையும் விவசாயத்தில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது கேப்சூல் முறையில் நடவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி ராஜசேகரிடம் பேசியபோது, "இந்த வருடம்  ஒரு ஏக்கர் நிலத்தில் அறுபதாம் குறுவை நெல் ரகத்தை கேப்சூல் முறையில்  நடவு செய்துள்ளேன். கடலை, இலுப்பை, வேப்பம் புண்ணாக்கு மற்றும்  பிளான்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ் ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து உரமாக்கினேன். அதை ஒரு கேப்சூலில் அடைத்து அதனுடன்  3 நெல் விதைகளையும் சேர்த்து வைத்து மூடி விதைச்சேன்.

ராஜசேகர்
ராஜசேகர்

நாற்றங்கால் அமைத்து பயிரிடுவதை விட, நேரடியாக கேப்சூல் முறையில் விதைப்பதால் நேரமும், செலவும் மிச்சமாகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும்.  இந்த கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும்  இரண்டரை கிலோ விதைநெல் மட்டுமே போதுமானது. சாதாரண  சாகுபடிக்கு  110 நாள்கள் தேவைப்படும். கேப்சூல் முறையில் நடவு செய்யும்போது 90 நாள்களில் அறுவடை செய்யலாம். சாகுபடி செய்யும் நாள்களும் குறைவு. செலவும் குறைவு" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism