Published:Updated:

கிராமங்களில், சித்திரை மாதத்தில் ஏன் `பொன்னேர்’ பூட்டுகிறார்கள் தெரியுமா?

பொன்னேர் உழவு செய்யும் நிகழ்வு

ஆண்டு முழுவதும் நல்ல மழை, நல்ல மகசூல் கிடைத்திட வேண்டுமென சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே `பொன்னேர் உழு’தலின் நோக்கம்.

கிராமங்களில், சித்திரை மாதத்தில் ஏன் `பொன்னேர்’ பூட்டுகிறார்கள் தெரியுமா?

ஆண்டு முழுவதும் நல்ல மழை, நல்ல மகசூல் கிடைத்திட வேண்டுமென சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே `பொன்னேர் உழு’தலின் நோக்கம்.

Published:Updated:
பொன்னேர் உழவு செய்யும் நிகழ்வு

சித்திரை மாதம் முதல் நாளில் செய்யும் உழவை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதிஉழவு’, `கோடை உழவு’ என்று சொல்வார்கள். தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து ஊர்ப்பொது வயலில், நிலத்தில் ஊரிலுள்ள விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்’ என்று பெயர். ஊருக்குப் பொதுவான நிலத்தில் பொன்னேர் பூட்டி உழுது தானியங்களை விதைத்துவிட்டுப் பின் அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுதுவிட்டு நவதானியத்தை விதைப்பார்கள்.

மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தல்
மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் முளைத்து வளரும் தானியங்களை ஊர் கன்றுகாலிகள் உண்ணும். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தயார்படுத்துவதில் ஊர் விவசாயிகள் ஒன்றுகூடி செய்யும் சித்திரை மாத தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்க்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயிகள் பொன்னேர் பூட்டி உழவு செய்தனர். 12 ஜோடி மாடுகள், 32 டிராக்டர்கள் உழவு ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசியபோது, ``தமிழ் வருஷத்தோட தலை மாசம்தான் சித்திரை. `சித்திரை மாசப் புழுதி பத்தரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்’னு கிராமத்துல சொலவடையே இருக்கு. மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, வீட்டுல சாணி மொழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அறுகம்புல்லைச் சொருகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு , மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி சாமி கும்பிடுவோம்.

ஏர் மாடுகள்
ஏர் மாடுகள்

தோள்ல ஏரைத் தூக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுட்டு ஊர்க்காளியம்மன் கோயிலுக்கு முன்னால கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டிட்டு, ஏர்க்கலப்பையை கோயில் வாசல்ல வரிசையா நிப்பாட்டிடுவோம். ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு ஊர்க்கோயில்ல பெட்டிய வச்சு, சாமி கும்பிட்டு எல்லா விவசாயிகள் ஏர்க்கலப்பைக்கும், மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும், ஒவ்வொரு சோடி மாடுகளும் ஒண்ணு பின்னால ஒண்ணாப் போயி, கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்துல வரிசையா ஏர்பூட்டி நிற்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நிலத்துலயும் சின்ன பூஜை செஞ்சு கோயில் தலைவர் அல்லது பூசாரி சொன்னதும், கிழக்கு மேற்கா மூணு தடவை உழுதுட்டு, நிலத்தைக் குறை போடாம முழுவதுமா உழுது முடிச்சுடுவோம். மாடுகள் நிலத்தை உழ உழ விவசாயிகளிட மிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவி விடுவோம். பிறகு, விவசாயிகள் அவரவர் சொந்த நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு வருவோம். வயலுக்குப் போன வீட்டு ஆம்பள களைப்போட வீட்டுக்கு வரும்போது களைப்பு தீர மோர், பானக்கரம்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாக.

விதை தூவும் விவசாயி
விதை தூவும் விவசாயி

அதே மாதிரி சித்திரையில் பொன்னேர் உழவடிச்ச அன்னிக்கு வீட்டுக்கு ஆம்பளைக வந்ததும் களைப்பு தீர ஏதாவது குடிப்பாக. இது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப வருஷமாவே நடக்குது. உழவடிச்சா அந்த வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்னு நம்பிக்கை” என்றார்.

``கோடையில பெய்யுற மழை நீரை மண்ணை விட்டு வெளியேற விடாம, மண்ணுலயே நிலை நிறுத்தி மண்ணோட ஈரப்பதத்தை அதிகப்படுத்துவதுதான் கோடை உழவோட நோக்கம். கோடையில பெய்யும் மழை நீரை முறையாச் சேமிக்கலேன்னா நிலத்துக்குப் பயன்படாம வீணாகிடும்.

வறட்சி ஏற்படும் காலத்துல மேல் மண்ணுல ஈரம் இல்லாட்டாலும், ஆழத்துல உள்ள தண்ணீர், மண்ணின் மேலே ஊடுருவி பயிரை மண்ணின் வறட்சியில் இருந்து பாதுகாக்கும். கோடையில் உழவடிப்பதால் மண் பொலபொலப்பாகும். இதனால மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழைநீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். கோடை உழவடிப்பதால் மண்ணின் அடியிலுள்ள சின்னச் சின்ன புழுக்கள் மேற்பரப்பில் கொண்டுவரப்படும். அந்தப் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகும். மண் இடுக்குகள்ல உள்ள கூண்டுப் புழுக்கள், முட்டைகளும் வெயில்ல காய்ஞ்சுடும்.

அணி வகுத்து நிற்கும் டிராக்டர்கள்
அணி வகுத்து நிற்கும் டிராக்டர்கள்

இடைவெளி விட்டு அடுத்தடுத்த முறை உழும்போது மீண்டும் முளைக்கும் களைகளும் கட்டுப்படும். ஒவ்வொரு மழை பெய்ஞ்சப் பிறகும் உழவடிக்கிறதுனால மண்ணோட வளம் அதிகரிச்சு மகசூலும் அதிகரிக்கும். ஆழமாக உழவடித்தால்தான் அதிக தண்ணீரை நிலத்துக்குள் சேமிக்க முடியும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்குக் கோடைமழைதான் உயிர்நாடி” எனக் கோடை உழவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கினார்கள் விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism