Published:Updated:

நானோ யூரியா என்றால் என்ன? பயிர்களின் வளர்ச்சியில் இதன் பங்கு என்ன?

வேளாண்மை

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கக்கூடிய 650-க்கும் மேற்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் 11,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நானோ யூரியா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

நானோ யூரியா என்றால் என்ன? பயிர்களின் வளர்ச்சியில் இதன் பங்கு என்ன?

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கக்கூடிய 650-க்கும் மேற்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் 11,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நானோ யூரியா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Published:Updated:
வேளாண்மை

பெரும்பாலும் விவசாயிகள், பயிர்கள் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும் 2020-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் யூரியாவின் நுகர்வு 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

யூரியா, விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நிலத்தைக் கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. அதற்கு நல்ல உபயமாகத்தான் இந்தியாவின் முதன்மை உர நிறுவனமான இஃப்கோ நானோ யூரியாவை கண்டுபிடித்துள்ளது.

யூரியா தூவுதல்
யூரியா தூவுதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடி உரமாகவோ, மேல் உரமாகவோ இடும்போது 30 - 35 சதவிகித சத்துதான் பயிருக்கு பயன்படுகிறது. மீதமுள்ள 65 - 70 சதவிகித சத்து நிலத்தடி நீரை மட்டும் பாதிக்காமல் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது.

இந்த 65 - 70 சதவிகித சத்து வீணாவதைத் தடுக்கத்தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ அறிவியல்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு ஆய்வுகளை நடத்தி உர உபயோகிக்கும் திறனை அதிகரிக்கும் வாய்ப்பைக் கண்டுபிடித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உர நிறுவனம் கண்டுபிடித்த நானோ யூரியாவை பவானிசாகரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நெல் மற்றும் மக்காச்சோள வயல்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகள் மூலம் யூரியாவை டிரோன் மூலம் தெளிக்கும் சாத்தியக்கூற்றைக் கண்டுபிடித்துள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 125 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி திரவ நானோ யூரியாவைக் கலந்து சாதாரண விசைத் தெளிப்பான் மூலம் 20 மற்றும் 40 பயிர்களில் தெளிக்க வேண்டும். இதற்கு ஒன்றிலிருந்து இரண்டு நாள்கள் ஆகும். மாறாக டிரோனில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி திரவ நானோ யூரியாவைக் கலந்து ஐந்தே நிமிடங்களில் இருமுறை தெளிக்கலாம். இதனால் கூலி மற்றும் நேரம் மிச்சமாகும்.

விவசாயம்
விவசாயம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் வயல்களில் திரவ நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளித்து ஆய்வில் ஈடுபட்டது. இவ்வாய்வில் 400 - 500 கிலோ தானிய மகசூலும் 1,000 கிலோ வைக்கோல் மகசூலும் கிடைத்தது. இது சாதாரண யூரியாவைப் பயன்படுத்தி பெறும் மகசூலைவிட அதிக மடங்கு மகசூல் ஆகும்.

இதனால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 வரை அதிக லாபம் பெறும் வாய்ப்புள்ளது. மேலும் டிரோன் மூலம் யூரியா தெளிப்பதால் மேல் உரம் இடுவதைத் தவிர்க்கலாம்.

உர நிறுவனம் கண்டுபிடித்த இந்த நானோ யூரியாவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ அறிவியல்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை பல்வேறு விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளில் ஈடுபடுத்தி 2021-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்தது. மேலும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கக்கூடிய 650-க்கும் மேற்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் 11,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நானோ யூரியா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

நானோ யூரியா குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நானோ அறிவியல்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:

இஃப்கோ நிறுவனம் 2019-ம் ஆண்டு தான் கண்டுபிடித்த நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நானோ யூரியா பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பேசினார்.

யூரியா
யூரியா

இந்த நானோ யூரியா பயன்பாட்டைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த ஆய்வுகளைக் கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ அறிவியல்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை செய்தோம். நானோ யூரியா பயன்படுத்தும் போதுள்ள பயிர்களின் விளைச்சல், சாதாரண யூரியாவுக்கும் நானோ யூரியாவுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் பாதிப்புகள் போன்ற ஆய்வுகள் 2 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் நானோ யூரியாவுக்கு சாதகமாகவே வந்தது.

எம்.பி கனிமொழி அவர்களின் கீழ் இயங்கும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் பாராளுமன்ற குழுவில் கடந்த மே மாதம் நானோ யூரியாவைப் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் நான் பங்குகொண்டு அந்தக் குழுவின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் பாராளுமன்றக் குழு நானோ யூரியாவை ஏற்றுக்கொண்டது.

கே.எஸ்.சுப்ரமணியன்
கே.எஸ்.சுப்ரமணியன்

நானோ யூரியாவைப் பயன்படுத்தினால் பயிர்கள் 10 - 20 சதவிகிதம் அதிக விளைச்சலும் இன்னும் சில பயிர்கள் 30 - 35 சதவிகிதம் அதிக விளைச்சலும் தரும் வாய்ப்புள்ளதை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும் நானோ யூரியாவை 11,000 இடங்களில் கண்காணிப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது. அந்த ஆய்வு முடிவுகளும் நானோ யூரியாவுக்கு சாதகமாகவே வந்தன.

எப்போதும் போல அடி உரமாக சாதாரண யூரியாவைப் பயன்படுத்திவிட்டு மேல் உரமாக நானோ யூரியாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் 25 - 50 சதவிகிதம் யூரியா பயன்பாட்டைக் குறைக்கலாம். மேலும், 6 - 20 சதவிகிதம் விளைச்சல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரு பாட்டிலில் நானோ யூரியா 500 மில்லி இருக்கும். இதில் 4 சதவிகிதம்தான் தழைசத்து இருக்கும். இந்த 500 மில்லி நானோ யூரியாவை 125 லிட்டர் தண்ணீரில் கலந்து 1 ஏக்கர் நிலத்தில் தெளிக்கலாம். இந்த நானோ யூரியாவை டிரோன் மூலமும் தெளிக்கலாம்.

நானோ யூரியாவை ஒரு ஏக்கர் நிலத்தில் கூலியாட்கள் மூலம் தெளித்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவைப்படும். அவர்களுக்கு கூலி ரூ.2,500 - 3,000 ஆகும். ஆனால், டிரோன் மூலம் தெளித்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்தே நிமிடத்தில் ரூ.500-க்கு தெளித்துவிடலாம். ஒரு நாளுக்கு 60 - 80 ஏக்கர் நிலத்துக்கு டிரோன் மூலம் நானோ யூரியாவைத் தெளிக்க முடியும்.
நானோ யூரியா தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 240 ஆகும். இந்த நானோ யூரியாவுக்கு எந்த மானியமும் வழங்கப்படவில்லை. ஆனால், ஒரு பேக் சாதாரண யூரியாவின் விலை 90 சதவிகித மானியம் போக கடைகளில் ரூ. 240 கிடைக்கிறது. அதனால் இரண்டு யூரியாவுக்கும் எந்தொரு விலை வித்தியாசமும் இல்லை.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

சாதாரண யூரியாக்களைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள 30-35 சதவிகித தழைச்சத்துதான் இலைகளைச் சேரும். மீதமுள்ள தழைச்சத்துகள் நிலத்தை மாசுபடுத்தும் மற்றும் வளிமண்டலத்தில் கலந்து வீணாகிவிடும். மேலும், இந்த தழைச்சத்துகள் ஓர் இலைக்குள் இழுக்கப்பட சுமார் 8 - 9 மணி நேரம் ஆகிறது.
ஆனால், நானோ யூரியாவை பயிர்களுக்கு தெளிக்கும்போது 80 - 90 சதவிகித தழைச்சத்துகள் பயன்படுத்தப்படும். மேலும் இந்த தழைச்சத்துகள் ஒரு இலைக்குள் ஒரு மணி நேரத்துக்குள்ளே சென்றுவிடும். ஆதலால் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளம் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவே" என்றார்.