Published:Updated:

புதுச்சேரி; நம் மண்ணுக்கு ஏற்ற மூலிகைகள் இவைதான்!

நிகழ்வில்

மூலிகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெங்களூரில் உள்ள Natural Remedies என்ற நிறுவனம் தங்களுக்குத் தேவையான மூலிகைகளின் அளவைக் குறிப்பிட்டு, அதைப் பயிர் செய்து தரும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தது...

புதுச்சேரி; நம் மண்ணுக்கு ஏற்ற மூலிகைகள் இவைதான்!

மூலிகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெங்களூரில் உள்ள Natural Remedies என்ற நிறுவனம் தங்களுக்குத் தேவையான மூலிகைகளின் அளவைக் குறிப்பிட்டு, அதைப் பயிர் செய்து தரும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தது...

Published:Updated:
நிகழ்வில்

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் மற்றும் பெங்களூர் டி.டி.யு பல்கலைகழகம் சார்பில் `லாபகரமான மூலிகைச் செடிகள் சாகுபடி' குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சமீபத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``மூலிகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னொன்று மாற்றுப் பயிராகவும் மூலிகைகளைச் சாகுபடி செய்யலாம்" என்றார்.

நிகழ்வில் கலந்துகொண்ட விவசாயிகள்
நிகழ்வில் கலந்துகொண்ட விவசாயிகள்

மூலிகை ஆராய்ச்சியாளர் முனைவர் மணிவேல் ஆன்லைன் வழியாகக் கலந்துகொண்டு பேசியபோது, ``அஸ்வகந்தா சிறுநீரைப் பெருக்கும். உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை போக்கும், வீக்கத்தைக் குறைக்கும், வாத நோயை கட்டுப்படுத்தும், உடலை தேற்றும், ஆண்மையை அதிகரிக்கும். இப்படிப் பல நன்மைகள் அஸ்வகந்தாவில் உள்ளன. அஸ்வகந்தாவுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதை எளிதாக சாகுபடி செய்யவும் முடியும்" என்றார்.

மூலிகைகளிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பது பற்றி பேசிய ஶ்ரீகாந்த், ``புதுச்சேரி, காரைக்கால் மண் வளத்தில் தண்ணீர் விட்டான் கிழங்கு, வல்லாரை, கற்றாழை, துளசி, நித்தியகல்யாணி, வெட்டிவேர், முருங்கை, அமுக்கரா (அஸ்வகந்தா), வசம்பு, முடக்கறுத்தான், நீர் பிரம்மி, பிரண்டை, சிறுக்குறிஞ்சான், எலுமிச்சை புள், நன்னாரி, மஞ்சள் கரிசாலை, கீழாநெல்லி, மூக்கிரட்டை, நெல்லி என இருபது வகையான மூலிகைகளை நன்றாக சாகுபடி செய்ய முடியும். இதை எப்படி விற்பனை செய்ய முடியும் என்பதை யோசித்தால் மூலிகை சாகுபடியும் நல்ல வருமானம் கொடுக்கும் தொழிலாக மாறிவிடும்" என்றார்.

கலந்துரையாடல்
கலந்துரையாடல்

நிகழ்வில் மூலிகைகளை வளர்க்கவும் விற்பனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கென்று ஒரு குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

பெங்களூரில் உள்ள Natural Remedies என்ற நிறுவனம் தங்களுக்கு தேவையான மூலிகைகளின் அளவை குறிப்பிட்டு, அதை பயிர் செய்து தரும் விவசாயிகள் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தது.

இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி இயக்கத்தின் இயக்குநர் ஶ்ரீதரன், ஆயுஷ் அமைப்பின் சுகாதார செயலர் உதயக்குமார், வேளாண் இயக்குநர் பாலகாந்தி, டிடியு பல்கலைகழக துறைத்தலைவர் அப்துல்கரீம், வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு மூலிகைச் செடிகள் பயிரிடுவதால் கிடைக்கும் பயன்கள், வருவாய், சாகுபடி முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்கள். போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.