Published:Updated:

நெல் கொள்முதல்: `இதனால் எங்களுக்கு கூடுதல் நஷ்டம்தான்!' - ஆன்லைன் பதிவில் பிரச்னை என்ன?

நெல் கொள்முதல்

``ஒரு மூட்டை நெல்லுக்கு தனியார் வியாபாரிகள் ரூ.1,000 தான் விலை தருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.1,250 விலை கிடைக்கும். ஆனால் ஆன்லைன் முன்பதிவு முறையில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகள் தனியாரிடம் விற்பனை செய்கிறார்கள்."

நெல் கொள்முதல்: `இதனால் எங்களுக்கு கூடுதல் நஷ்டம்தான்!' - ஆன்லைன் பதிவில் பிரச்னை என்ன?

``ஒரு மூட்டை நெல்லுக்கு தனியார் வியாபாரிகள் ரூ.1,000 தான் விலை தருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.1,250 விலை கிடைக்கும். ஆனால் ஆன்லைன் முன்பதிவு முறையில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகள் தனியாரிடம் விற்பனை செய்கிறார்கள்."

Published:Updated:
நெல் கொள்முதல்

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தமிழக அரசின் நேரடி நெல் முதல் நிலையங்களில் நிலவக்கூடிய குளறுபடிகளாலும் முறைகேடுகளாலும் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. கடந்த ஆட்சியில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட காலதாமதத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். கொள்முதல் நிலையங்களிலும் சாலைகளிலும் நெல்லைக் கொட்டி வைத்து, பல நாள்கள் காத்திருந்த தருணங்களில் மழை பெய்து, நெல்மணிகள் நனைந்து வீணானதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார்கள்.

இந்நிலையில்தான், நாங்கள் ஆட்சிகள் வந்தால், நெல் கொள்முதல் நிலைய அவலங்களுக்கு முடிவு கட்டப்படும் எனவும் விவசாயிகளின் வாழ்வில் விடியல் பிறக்கும் எனத் தி.மு.க-வினர் வாக்குறுதி அளித்தார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும்கூட, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளும் முறைகேடுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, காலதாமதத்தைத் தவிர்ப்பதாகச் சொல்லி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு முறையால் விவசாயிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

இளங்கீரன்
இளங்கீரன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தலைவர் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இளங்கீரன், ``2021-22-ம் ஆண்டில் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் இங்கு நிலவக்கூடிய பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் தனியார் வியாபாரிகளிடம் செல்ல வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு தனியார் வியாபாரிகள் 1,000 ரூபாய்தான் விலை தருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், ஒரு மூட்டை (60 கிலோ) நெல்லுக்கு 1,250 ரூபாய் விலை கிடைக்கும். ஆனால் ஆன்லைன் முன்பதிவு முறையில் உள்ள குளறுபடிகளால், வியாபாரிகளிடம் நஷ்ட விலைக்கு நெல்லை விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று ஆன்லைன் பதிவு செய்து பிறகு, மீண்டும் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையத்தில் அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றால்தான் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வெளிச் சந்தை வியாபாரிகளிடமும் இடைத்தரகர்களிடமும் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் குத்தகை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

நெல் கொள்முதல் (File Pic)
நெல் கொள்முதல் (File Pic)

உதாரணத்துக்கு ஒரு கிராமத்தில் அதிகபட்சமாக 1,000 ஏக்கர் நிலம் இருக்கும். இங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் மேற்படி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளிடம் குத்தகை சாகுபடி என்ற பெயரில் ஏக்கருக்கு 15,000 ரூபாய் கொடுத்து சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அடங்கல் தேவைப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த அடங்கல் பெற வேண்டுமென்றால் குத்தகை சாகுபடி செய்த விவசாயிகள் அவர் பெயரிலேயே நேரடியாகப் பயிர் காப்பீடு செய்திருக்க வேண்டும். அங்கு வசிக்கும் விவசாயிகள் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அவர் பெயரிலேயே பயிர் காப்பீடு செய்துள்ளார்கள். இந்த நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால் அவர், `பயிர் காப்பீடு செய்தவர் பெயரில்தான் நாங்கள் அடங்கல் கொடுக்க முடியும்' என்று சொல்கிறார்கள். பயிர் செய்த விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல், பெரும் நஷ்டத்தோடு வெளிச் சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

நெல் கொள்முதல் நிலையம் (File Pic)
நெல் கொள்முதல் நிலையம் (File Pic)

காவிரி டெல்டா பகுதி முழுவதும் இந்நிலை நீடிக்கிறது. எனவே, எந்த நிபந்தனையுமின்றி கடந்த ஆண்டு போல அடங்கலை மட்டும் பெற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்லை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இது உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும் இல்லையென்றால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதோடு, விலை வீழ்ச்சிக்கும் இது வழிவகுக்கும். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்து பழைய நடைமுறையையே பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism