Published:Updated:

இயற்கை விவசாயத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், இவற்றைச் செய்யுங்கள் பிரதமரே!

Modi
News
Modi ( AP Photo/Rajesh Kumar Singh )

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, தேசிய இயற்கை விவசாய மாநாட்டில் காணொளி மூலம் இந்திய பிரதமர் நநேந்திர மோடி கலந்து கொண்டது, இயற்கை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

`இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற இதுதான் சரியான தருணம்" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தது நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. இதுவரை இந்திய பிரதமர்களில் எவரும் இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசாத நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி இவ்வாறு பேசியது, வேளாண் பொருளாதார அறிஞர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான் இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் இதோடு நின்றுவிடாமல், அதை நாடு முழுவதும் வளர்த்தெடுக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சில முக்கிய யோசனைகளை முன் வைக்கிறார்கள் விவசாயிகள்.

Agriculture
Agriculture

இந்தியாவில் 1970-களின் தொடக்கத்தில் `பசுமைப் புரட்சி' நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகள் ரசாயன விவசாயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக, இயற்கை விவசாயத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கை விவசாயம் என்ற சொல்லை கேட்டாலே, நமது ஆட்சியாளர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்து வந்தது. இந்நிலையில்தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, தேசிய இயற்கை விவசாய மாநாட்டில் காணொளி மூலம் இந்திய பிரதமர் நநேந்திர மோடி கலந்து கொண்டது, இயற்கை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``நாட்டின் பசுமைப் புரட்சியில் ரசாயன உரங்கள் முக்கிய பங்கு வகித்தது உண்மைதான். ஆனால், இந்த முறையில் விளைவிக்கப்படும் விளைபொருள்களை உட்கொள்ளும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்போது மாற்று வழிகளுக்கு மாற வேண்டியது மிகவும் அவசியம். வேளாண்மை தொடர்பான பிரச்னைகள் மேலும் பெரிதாவதற்கு முன்பாகச் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் சரியான தருணம். குறிப்பாக, இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)

நோய் வந்த பிறகு, குணப்படுத்துவதற்கு பதில் வருமுன் காப்பதே சிறந்தது. இயற்கை விவசாயத்தால் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள 80 சதவிகித சிறு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதன்மூலம் ரசாயன உரங்களுக்குச் செலவிடும் தொகையை மிச்சப்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கும். பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீரை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இயற்கை வேளாண்மையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம். இந்தப் புரட்சிக்கு விவசாயிகளும் மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் என பிரதமர் மோடியே அழைப்பு விடுத்தது, இயற்கை விவசாயிகளை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையுமே ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால், அதேசமயம், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி, வெறும் பேச்சோடு நின்றுவிடக்கூடாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு, உணவு பற்றாக்குறையின்மை ஆகியவற்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, கடந்த 59 ஆண்டுகளாக, நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன உரங்களையும், கொடிய நோய்களை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த இங்குள்ள விவசாயிகளை நமது ஆட்சியாளர்கள் பழக்கப்படுத்திவிட்டார்கள். இதனால் மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் மட்டுமல்லாமல், நன்மை செய்யக்கூடிய பூச்சி இனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்துள்ளன. இந்திய விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மீதான அடிமைத்தனம், நம்பிக்கை மற்றும் மோகத்தில் இருந்து மீண்டு வர, மத்திய மாநில அரசுகள் சில சிறப்பு நடவடிக்கைகளை மோற்கொள்வது அவசியம்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

மத்திய அரசு, ரசாயன இடுப்பொருள்களுக்கு வழங்கி வரும் மானியத்துக்கு நிகராக, இயற்கை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பகுதி விவசாயிகள் மற்றும் வேளாண் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயனடையக்கூடிய வகையில் முதல்கட்டமாக, நான்கு இடங்களில் இயற்கை வேளாண் பல்கலைக்கழக்கங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வோரு மாநிலத்திலும் தலா 10 இயற்கை வேளாண் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்பக்கல்வி பாடத்திட்டங்களிலும் இயற்கை வேளாண்மையை இடம்பெறச் செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும் இதைச் செய்ய விரும்புவோர்களுக்கும் உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்துக்கும் தலா ஒரு நாட்டுப் பசுவை, கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும். ஒரு நாட்டுப் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் 12 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய முடியும்.

இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இயற்கை வேளாண்மைத் துறைக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு இதற்கான செயல்திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாகவே இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் இருந்தால் இவற்றையெல்லாம் செயல்படுத்த வேண்டும்; இவற்றையெல்லாம் செய்தால்தான் இந்திய விவசாயிகள் மிக விரைவாக இயற்கை விவசாயத்துக்குத் திரும்புவார்கள்’’ எனத் தெரிவித்தார்.