Published:Updated:

கூடுதல் மகசூல் கொடுக்கும் தெளிப்பு முறை!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கூடுதல் மகசூல் கொடுக்கும் தெளிப்பு முறை!

தொழில்நுட்பம்

Published:Updated:
தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில்நுட்பம்

பாசன முறையில் இடுபொருள்களை கொடுப்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் வழக்கம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம், பட்டுமுடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் பாசன முறையைவிட தெளிப்பு முறையில் கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கிறது என்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

மனோகரன்
மனோகரன்

“நாங்க உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செஞ்சிகிட்டு வர்றோம். பொதுவாகவே பாசனத் தண்ணி வழியா இயற்கை உரத்தைக் கொடுப்பது வழக்கம். அப்படிக் கொடுக்கும்போது உளுந்தோட வளர்ச்சி போதுமான அளவுக்கு அதிகரிக்கல. பூச்சித்தாக்குதலும் பெரிய அளவுல கட்டுப்படல. சரி... உளுந்துல இப்படித்தான் மகசூல் கிடைக்கும்போல அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல பஞ்சகவ்யா, உயிர் உரங்களைத் தெளிப்பு முறையில கொடுத்தா என்னன்னு தோணுச்சு. அப்படிக் கொடுக்க ஆரம்பிச்ச பிறகு காய் நல்லாவே திரட்சியா வளர்ந்துச்சு.

உளுந்து
உளுந்து

உளுந்து 70 நாள்ல மகசூலுக்கு வரும். எனக்கு 60-ம் நாள்லயே அறுவடைக்கு வந்துடுச்சு. உளுந்து பயிர் முழுசுமே ஒரே தடவை அறுவடைக்கு வந்திடாது. முதல்ல உளுந்துச் செடியோட அடிப்பகுதியில இருக்கிற காய்கள பறிக்கணும். பிறகு ஒரு வாரம் விட்டா மேலே இருக்கும் காய்கள் வந்திடும். பிறகு, அறுவடை செஞ்சு மொத்தமா தானியங்கள பிரிச்சு எடுக்கலாம். இந்த யோசனையை அக்கம் பக்கமுள்ள ரசாயன விவசாயிகளுக்குச் சொன்னேன். அவங்களும் தெளிப்பு முறையில இப்ப கொடுக்கிறாங்க. நாங்க சாகுபடி செய்றது டி.எம்.வி-1-ங்கற உளுந்து ரகம். வழக்கமா ஏக்கருக்கு 500 கிலோ மகசூல் கிடைச்சிட்டு வந்தது. தெளிக்க ஆரம்பிச்ச பிறகு, 10 முதல் 15 சதவிகித கூடுதல் மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது.

உளுந்து செடிகள்
உளுந்து செடிகள்

அதேமாதிரி பயறு சாகுபடிக்கு நிறைய பேரு அடியுரம் கொடுக்குற பழக்கமில்ல. அடி உரமா எரு இல்லைன்னா உயிர் உரங்கள் கலந்த செறிவூட்டப்பட்ட எருவை கொடுக்கும்போது மகசூல் கூடுதுங்கறதை அனுபவத்துல உணர்ந்திருக்கேன்” என்றார்.

தொடர்புக்கு, மனோகரன்,

செல்போன்: 94446 60398

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism