Published:Updated:

அயோடின் கலந்த உப்பு... கோல்டன் அரிசி!கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி!

நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்

நாட்டு நடப்பு

அயோடின் கலந்த உப்பு... கோல்டன் அரிசி!கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி!

நாட்டு நடப்பு

Published:Updated:
நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்

சுமை விகடன், விவசாய விளை பொருள்கள் உற்பத்தி யாளர்கள் மற்றும் வியாபாரிகள் (APPTA), நாகர்கோவில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் கிரியேட் அமைப்பு இணைந்து நடத்திய ‘உலக உணவு தினம்’ நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 16-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிரியேட் அறக்கட்டளை தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். விழாவில் பேசிய கிரியேட் மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம், “நம் நாட்டில் 60 சதவிகிதம் பாமாயில்தான் பயன்படுத்து கிறோம். 70,000 கோடி முதல் 80,000 கோடி ரூபாய் ஆண்டுக்குச் செலவு செய்கிறோம். பெட்ரோல் விலைக்கு இணையாகப் பாமாயி லுக்குச் செலவு செய்கிறோம். பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. அது விவசாயிகளுக்கும் பயனாக அமையும்.

நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்
நிகழ்வில் பேசும் பொன்னம்பலம்


இரண்டு ரூபாய்க்குப் பரல் உப்பு வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இன்றைக்கு 20 ரூபாய் கொடுத்து அயோடின் உப்பு வாங்குகிறோம்.

மலைப் பிரதேசங்களில் இருப் பவர்களுக்கு அயோடின் சத்து வேண்டும். நாம் சுமார் 2,000 கிலோ மீட்டர் கடலால் சூழப்பட்ட தீபகற்ப இந்தியாவில் இருக்கிறோம். மீன் நமக்கு முக்கிய உணவு. இங்குள்ள தாவரங்களிலும் அயோடின் உள்ளது. காய்கறி களைச் சாப்பிடச் சொல்லி மக்களிடம் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, அயோடின் இல்லாத உப்பை விற்கக் கூடாது என்பதைச் சட்டமாக்கிவிட்டார்கள். உப்புக்கு ஏற்பட்ட நிலை அரிசிக்கும் வரக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கலந்துகொண்டோர்
கலந்துகொண்டோர்

அடுத்ததாக ‘கோல்டன் ரைஸ்’ என்ற மரபணு மாற்றப்பட்ட அரிசி வருகிறது. அதில் வைட்டமின் ‘இ’ இருக்கிறதாம். நம்மிடம் இல்லாத அரிசியா? இந்தியாவில் இரண்டு லட்சம் நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 5,000 ரகங்கள், குமரி மாவட்டத்தில் 82 ரகங்கள் இருந்திருக்கின்றன. கோல்டன் ரைஸ், செறிவூட்டப்பட்ட அரிசி ஆகியவை நம் உணவு பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிடும்” என்றார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நுகர்பொருள் ஆராய்ச்சி கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் துரைசிங்கம் பேசுகையில், “கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 17 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும் என அரசு கூறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், அதிக மழை பெய்யும் பகுதி. எனவே, நெல்லுக்கான ஈரப்பதத்தை 20 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்” என்றார்.