Published:Updated:

உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்! - கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது!

உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்!
பிரீமியம் ஸ்டோரி
உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்!

சாதனை

உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்! - கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது!

சாதனை

Published:Updated:
உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்!
பிரீமியம் ஸ்டோரி
உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்!

கொலம்பியா நாட்டில் தற்போது மாம்பழம் அறுவடைக் காலம். இந்த முறை அதிக எடைகொண்ட மாம்பழத்தை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளனர் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மரோகுயின் தம்பதி.

‘‘இந்த மண்ணின் மீது நாங்கள் கொண்ட காதல்தான் இவ்வளவு பெரிய மாம்பழம் கிடைப்பதற்கான காரணம். இந்த கின்னஸ் சாதனையை நாங்கள் இந்தக் கிராமத்தினருக்கு அர்ப்பணிக்கிறோம்” விருதுபெற்ற மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்கள்.

இத்தம்பதி அறுவடை செய்திருக்கும் மாம்பழத்தின் எடை 4.25 கிலோ. இதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் 2009-ம் ஆண்டு 3.43 கிலோ எடையுள்ள ஒரு மாம்பழம் சாதனை படைத்திருந்தது. இப்போது அதை முறியடித்து, உலக மாம்பழ விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளனர்.

ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மரோகுயின் தம்பதி
ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மரோகுயின் தம்பதி

கொலம்பியாவின் குயாட்டா பகுதியில் வசித்து வரும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா பரேரா (German Orlando Novoa Barrera) மற்றும் ரெய்னா மரியா மரோகுயின் (Reina Maria Marroquin) ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வந்த தோட்டத்தில் இந்த பிரமாண்டமான மாம்பழம் காய்த்துள்ளது. போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29-ம் தேதி கின்னஸ் உலகச் சாதனை புத்த கத்தில் இது இடம் பிடித்தது. குயாட்டா பகுதியில் காபி தயாரிப்பு சார்ந்த மூலப்பொருள்கள் பயிரிடப் படுகின்றன. மாம்பழங்கள் குறைவான பரப்பில்தான் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு தங்கள் தோட்டத்தில் விளைந்த மாம்பழத் தின் பெரிய அளவையும், அதிக அளவு எடையையும் கண்டு ஆச்சர்யமடைந்த இத்தம்பதி இணையத்தில் முதலில் தேடியிருக்கிறார்கள். இணையதளத்தில் கிடைத்த தகவல்களைச் சரிபார்த்த பிறகு, தங்களின் மாம்பழத்தை எடை போட்டுப் பார்த்திருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு உலகச் சாதனை படைத்த மாம்பழத் தைவிட தங்களின் மாம்பழமே உலகிலேயே அதிக எடையுள்ளது என்பதை உறுதிப்படுத் தியுள்ளனர். அதன் பிறகு, இதை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கிறார்கள்.

மாங்காயை எடை போடுதல்
மாங்காயை எடை போடுதல்

உலகச் சாதனை வரிசையில் இடம்பெற்றது குறித்துப் பேசிய சாதனைத் தம்பதி, ‘‘இந்தச் சாதனை மூலம் கொலம்பியாவில் உள்ள மக்கள் கிராமப்புறங்களை நேசிக்கும் கடின உழைப்பாளிகள் என்பதை உலகுக்குக் காண்பிப்பதே எங்களின் குறிக்கோள். நாங்கள் விளைவித்த நிலம் எங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. உலகமே கொரோனா நோய்த் தொற் றின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், இந்தச் சாதனை எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சி யைத் தந்திருக்கிறது. இந்த விருது எங்கள் பெற்றோர் எங்களுக்குப் போதித்த அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகிய வற்றை அங்கீகரிப்பதாக இருக்கிறது. இந்த ஒரு மாம்பழத்தை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உண்ட போது அளவில்லாத மகிழ்ச்சி யாக இருந்தது” என்கிறார்கள்.

அறுக்கப்பட்ட மாம்பழம்
அறுக்கப்பட்ட மாம்பழம்

குயாட்டா பகுதியின் இரண்டாவது கின்னஸ் சாதனை இது. முன்னதாக 2014-ம் ஆண்டு 3,199 சதுர மீட்டரில் மிக நீளமான இயற்கை மலர் கம்பளத்தை உருவாக்கியதற்காக உலகச் சாதனையைப் பெற்றிருந்தது. விவசாயத்துக்குப் பிரபலமான குயாட்டா மக்கள், காபி, அரேபாஸ், மொகோலாஸ் மற்றும் மாம்பழங் களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு தனது அதிகார பூர்வ வலைதளப் பக்கத்தில் இவர்களின் சாதனையைப் பதிவு செய்து பாராட்டியிருக்கிறது.