Published:Updated:

கரும்பு பயிர்களில் மஞ்சள் நோய்த் தாக்குதல்; வேதனையில் தவிக்கும் தஞ்சை விவசாயிகள்

கரும்பு பயிர்கள்

சர்க்கரை ஆலைக்கு அனுப்புறதுக்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்தப் பகுதி விவசாயிகள் நிறைய பேர் கடந்த பல வருஷமா கரும்பு சாகுபடி செஞ்சுகிட்டு வர்றாங்க. இதுக்கு முன்னாடி எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு இந்த முறை மஞ்சள் கடுமையா தாக்கியிருக்கு...

கரும்பு பயிர்களில் மஞ்சள் நோய்த் தாக்குதல்; வேதனையில் தவிக்கும் தஞ்சை விவசாயிகள்

சர்க்கரை ஆலைக்கு அனுப்புறதுக்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்தப் பகுதி விவசாயிகள் நிறைய பேர் கடந்த பல வருஷமா கரும்பு சாகுபடி செஞ்சுகிட்டு வர்றாங்க. இதுக்கு முன்னாடி எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு இந்த முறை மஞ்சள் கடுமையா தாக்கியிருக்கு...

Published:Updated:
கரும்பு பயிர்கள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரகாரம் வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மஞ்சள் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பயிரிகளின் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள் ஆய்வு
விஞ்ஞானிகள் ஆய்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய வீரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி நாச்சியப்பன், ``இந்தப் பகுதிகள்ல கரும்பு சாகுபடி அதிகம். சர்க்கரை ஆலைக்கு அனுப்புறதுக்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்தப் பகுதி விவசாயிகள் நிறைய பேர் கடந்த பல வருஷமா கரும்பு சாகுபடி செஞ்சுகிட்டு வர்றாங்க. இதுக்கு முன்னாடி எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு இந்த முறை மஞ்சள் கடுமையா தாக்கியிருக்கு.

ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒரு சில விவசாயிகளோட கரும்பு பயிர்கள்ல அங்கொண்ணும் இங்கொண்ணுமா லேசான பாதிப்பு தான் இருந்துச்சு. அப்ப இதைப் பத்தி விவசாயிகள் பெருசா கவலைப்படலை. மருந்தடிச்சா கட்டுப்பட்டுடும்னுதான் எல்லாருமே நினைச்சோம். ஆனா, இந்த நோய் அடுத்தடுத்த கரும்பு வயல்களுக்கும் வேகமா பரவ ஆரம்பிச்சிடுச்சு. மஞ்சள் நோய்த்தாக்குதல் ஏற்பட்டதோட மட்டுமல்லாம, இலைக்கணுப்புழு, மாவுப்பூச்சித்தாக்குதல்களும் கடுமையான பாதிப்பு. கோ-11015, குடியாத்தம்-7, மஞ்சுளா ஒட்டு, கோ-86032 உட்பட இன்னும் பல கரும்பு ரகங்கள் பயிர் பண்ணியிருக்காங்க. எல்லாத்துலயே இந்த பாதிப்புகள் இருக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதெல்லாமே 3 - 6 மாச வயசுள்ள பயிர்கள். புதுசா நடவு செஞ்ச கரும்பு, மறுதாம்பு கரும்புனு எல்லாத்துலயுமே இந்த பாதிப்பு இருக்கு. இதுவரைக்கும் ஏக்கருக்கு 40,000-50,000 ரூபாய் செலவாகி இருக்கு. இனிமே தேறி வர வாய்ப்பில்லைனு முடிவெடுத்த விவசாயிகள் சிலர் தங்களோட கரும்பை டிராக்டரை விட்டு அழிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அதிகாரிகள் எல்லாம் இங்க வந்து பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டாங்க.

ஆய்வு
ஆய்வு

தொடர்ச்சியா பல வருஷமா கரும்பையே பயிர் செஞ்சதுனாலதான், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நெல் உட்பட மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்ங்கனு ஆலோசனை சொன்னாங்க. மஞ்சள் நோயை கட்டுப்படுத்த சில மருந்துகளையும் பரிந்துரை செஞ்சிருக்காங்க. ஆனா, இந்த மருந்துகளை அடிச்சாலும் கூட இனிமே பயிர் தேறி வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் 70 சதவிகிதத்துக்கு மேல மகசூல் இழப்பு ஏற்படும். பல நூறு ஏக்கர் கரும்பு பாதிக்கப்பட்டிருக்கு. தமிழக அரசு இதை முறையா ஆய்வு பண்ணி, ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு கொடுத்தாதான் இந்த வருஷம் கரும்பு சாகுபடியில ஏற்பட்ட நஷ்டத்தை விவசாயிகளால சமாளிக்க முடியும்’ என்றார்.

கரும்பு பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டினிடம் நாம் பேசியபோது ‘’வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த பகுதிகளுக்கு போயி ஆய்வுப் பண்ணினாங்க. பருவநிலை மாற்றத்தால, ஈரப்பதம் அதிகரிச்சதுனாலயும், பல வருஷமா, கரும்பையே பயிர் செஞ்சனதுனாலயும், தொடர்ச்சியா பல வருஷங்களா, அதே கரும்புல இருந்து விதைக்கரணை எடுத்து பயிர் பண்ணினதுனாலயும்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுருக்குனு தெரிய வந்திருக்கு.

விவசாயி  நாச்சியப்பன்
விவசாயி நாச்சியப்பன்

இப்ப ஆய்வு செஞ்ச வேளாண் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்றாங்க. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்யுங்கனு இங்கவுள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லியிருக்கோம் மஞ்சள் நோயை கட்டுப்படுத்த சில மருந்துகளையும் பரிந்துரை செஞ்சிருக்காங்க. எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்பட்டுருக்குனு கணக்கெடுக்க ஆரம்பிச்சிருக்கோம். கணக்கெடுப்பு பணி முடிஞ்சதும் இந்த விவரங்கள் அரசுக்கு அனுப்பப்படும்’’ எனத் தெரிவித்தார்.