Published:Updated:

துப்புரவுப் பணியாளர்களின் ஓர் இரவு! #VikatanPhotoStory

துப்புரவு தேவதைகள்
துப்புரவு தேவதைகள் ( படங்கள் எடுக்கப்பட்ட இடம்: கடலூர் )

நள்ளிரவில், நகர சாலைகளில் பயணிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்; ஆள் அரவமற்ற அந்நேரத்தில், சாலைகளில் தேங்கிய குப்பைகளை அகற்றிக்கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றி. ஒவ்வொருநாளும் மாசுகளால் வாடிப்போகும் சாலைகளுக்கு இரவில் ஒப்பனை இடுபவர்கள் இவர்கள். அப்படி ஓர் இரவு இங்கே...

நாம் இரவில் பார்க்கும் நகரம் காலையில் பார்க்கும்போது மிகவும் தூய்மையாக தெரிய காரணமானவர்கள் இவர்களே.

இவர்களின் கடின உழைப்பை ஒரு சில வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. நேரில் பார்த்தால்தான் புரியும்.

தெருவிளக்கின் வெளிச்சத்தில் தங்கள் வேலைகளை செய்துகொண்டே சக ஊழியர்களுடன் நாட்டுநடப்பு, குடும்ப சூழல், டிவி சீரியல் என வேலை அலுப்பு தெரியாமல் பேசி மகிழ்கின்றனர்.

ஒரு சில இடங்களில் அவர்கள் குப்பைகளை அள்ளும்போது படும் துயரங்கள் கொடுமையானவை.

தூய்மையை மட்டுமே விரும்பும் நாம் அனைவரும் இவர்களை சற்று ஒதுக்கியே பார்க்கின்றோம், ஆனால் அந்த தூய்மையை கொடுப்பதே இவர்கள்தான் என்பதை மறந்து விடுகின்றோம்.

நாம் கொட்டும் குப்பைகளில் கண்ணாடித் துண்டுகள் மற்றும் துண்டுக்  கம்பிகள் ஆகியவற்றை குப்பையோடு சேர்த்துக் கொட்டாமல், தனியாக போட்டால் அது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்காது.

இரவு 7 மணியிலிருந்து இவர்களின் பணி துவங்குகிறது, இவர்களுக்கு உணவு இடைவேளை கிடையாது வேலை பார்க்கும் இடத்திலேயே சாப்பிட்டு கொள்கின்றனர், காலை 7 மணிவரை பணி தொடர்கின்றது.

கடின உழைப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதை, இவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையோர் பெண்களே ஆவர்.

கழிவுகள் சேர்க்கப்படும் குப்பைக்கிடங்கு
கழிவுகள் சேர்க்கப்படும் குப்பைக்கிடங்கு
நகரத்தின் அசுத்தங்களை அகற்றி தூய்மை செய்யும் இவர்களே துப்புரவு தேவதைகள்.

அடுத்த கட்டுரைக்கு