Published:Updated:

29 ஆண்டுகள், இன்னும் சலிக்காத கரங்கள்... ஏழை நோயாளிகளின் பசியாற்றும் மனிதர்! #VikatanPhotoStory

திருச்சி பொன்மலையைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியர் ரவீந்தரக்குமார், கடந்த 29 வருடங்களாக திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கிவருகிறார். திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பசியாற்றும் இந்த உன்னதப் பணி குறித்த புகைப்பட தொகுப்பு...

ரவீந்தரகுமாரின் தந்தை கோவிந்தராஜும் ரயில்வே ஊழியர். அவர், உறவினர் ஒருவரை காண திருச்சி மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவமனை வளாகத்தில், பெண்கள் சுடுநீருக்கும் கஞ்சிக்காகவும் அலைவதைக் கண்டு மனம் வெதும்பினார்.

அதையடுத்து கோவிந்தராஜ், நோயாளிகளுக்கு முதலில் சுடுநீர் காய்ச்சி வழங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து, ரவீந்தரகுமார் கடந்த 29 வருடமாக நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்

தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, கடவுள் தரிசனம் முடித்து, தன்னுடன் இணைந்த அன்பர்களுடன் உணவுத் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்.

காலையில் நோயாளிகள் கஞ்சி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என கஞ்சி மற்றும் பொங்கல் உள்ளிட்ட எளிமையாக ஜீரணம் ஆகும் உணவுகளை பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

தயாரித்த உணவுகளை சுடச்சுட பாத்திரங்களில் வைத்து ஆறவைக்கிறார்கள்

காலை 6 மணியளவில் உணவை எடுத்துக்கொண்டு அவரின் வாகனம் கிளம்புகிறது.

அந்த வாகனத்தின் வருகைக்காக அரசு மருத்துவமனை நோயாளிகள் மட்டுமல்லாமல், ஏழைகளும் பாத்திரங்களுடன் காத்திருக்கின்றனர்.

வண்டியில் இருந்து மளமளவென உணவு பதார்த்தங்கள் அடங்கிய பாத்திரங்கள் இறக்கி வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து உணவுகளை இறக்கியதும், பக்தியுடன் நோயாளிகளுக்கு அன்பர்கள் சகிதமாக அன்னதானம் வழங்கப்படுகிறத.

வந்தவர்களுக்கு அன்போடு, உணவு வழங்கிய அன்பர்கள், பாத்திரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளுக்கு பாத்திரங்களில் உணவு  கொண்டுச் செல்ல வழங்குகிறார்கள்.

``நிறைய நல்ல உள்ளங்கள் இந்த  திட்டத்துக்கு உதவி செய்றாங்க. சிலர் தங்கள் உடல் உழைப்பைக் கொடுக்குறாங்க. அவர்களின் உதவியாலத்தான் இதையெல்லாம் என்னால செய்ய முடியுது" - ரவீந்தரகுமார்

``மருத்துவமனைக்கு வருபவர்கள், பெரும்பாலும் ஏழைகள். ஒரு வாரம் முதல் 15 நாள் வரை தங்கி இருப்பார்கள். நோயாளிகளுடன், உறவினர்கள் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களிடம் காசு தீர்ந்துவிடும். அப்படி யாரும் கையில காசு இல்லாமல் பட்டினியாகக் இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய நோக்கம்” என்கிறார் ரவீந்தரகுமார்

அடுத்த கட்டுரைக்கு