Published:Updated:

தனுஷ்கோடி : ஆழிப்பேரலை கோரத் தாண்டவத்தின் 56-வது ஆண்டு தினம்..!

தொழில்நகரம் தனுஷ்கோடியின் மிஞ்சிய எச்சங்கள்!

அழிவுக்கு முன் தனுஷ்கோடி சுதந்திர தினத்தில் ....
அழிவுக்கு முன் தனுஷ்கோடி சுதந்திர தினத்தில் ....
தனுஷ்கோடி மாரியம்மன் கோயில் திருவிழா ....
தனுஷ்கோடி மாரியம்மன் கோயில் திருவிழா ....
டிசம்பர் 1964. தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தைவிட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தத!
டிசம்பர் 1964. தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தைவிட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தத!
கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால், புயல் எங்கு கரையைக் கடக்கப்போகிறது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவுக்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.
புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால், புயல் எங்கு கரையைக் கடக்கப்போகிறது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவுக்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.
டிரெயின் நம்பர் 653, பாம்பனிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசஞ்சர் சரியாக 11:55-க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது யாத்திரையைத் தொடங்கியது.

ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கியிருந்தது.
இன்ஜின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்திருந்தார்.
டிரெயின் நம்பர் 653, பாம்பனிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசஞ்சர் சரியாக 11:55-க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கியிருந்தது. இன்ஜின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்திருந்தார்.
தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால், அனைத்துத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்திருந்தன. ரயில்வே சிக்னல், தந்திக் கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.
டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. `பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயலிழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.
.
எங்கும் இருள் சூழ்ந்து இருக்க, ரயில் வருவதைத் தெரிவிக்க.... தன்னிடமிருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகர்த்த ஆரம்பித்தார்.
தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால், அனைத்துத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்திருந்தன. ரயில்வே சிக்னல், தந்திக் கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. `பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயலிழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. . எங்கும் இருள் சூழ்ந்து இருக்க, ரயில் வருவதைத் தெரிவிக்க.... தன்னிடமிருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகர்த்த ஆரம்பித்தார்.
அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்... ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் ரயிலை வாரி அணைத்துக் கொண்டது. ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆகினர்.

ரயில் நிலையத்துக்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளியில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசஞ்சர் ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிக பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.
அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்... ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் ரயிலை வாரி அணைத்துக் கொண்டது. ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆகினர். ரயில் நிலையத்துக்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளியில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசஞ்சர் ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிக பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.
தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கியிருந்ததது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களைப் புயலுக்குக் காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடல்களாக ஒதுங்கத் தொடங்கியிருந்தன.
தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கியிருந்ததது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களைப் புயலுக்குக் காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடல்களாக ஒதுங்கத் தொடங்கியிருந்தன.
தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகாலத் தகவல் தொடர்பு சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

'இன்னது நடக்கிறது...’ என்று தகவல் சொல்லக்கூட அங்கிருந்தவர்களுக்கு வழியில்லாமல் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி ஓர் ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.
தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகாலத் தகவல் தொடர்பு சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, 'இன்னது நடக்கிறது...’ என்று தகவல் சொல்லக்கூட அங்கிருந்தவர்களுக்கு வழியில்லாமல் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி ஓர் ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.
நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாகச் செயல் படத் தொடங்கினார்கள்.
நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாகச் செயல் படத் தொடங்கினார்கள்.
அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அவற்றைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குதான் நின்றாக வேண்டும்.

இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது...
ஒரு ரயில் ஒரு நூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது.

ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத்தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இறுக மூடிக்கொண்டது.
அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அவற்றைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குதான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது... ஒரு ரயில் ஒரு நூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது. ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத்தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இறுக மூடிக்கொண்டது.
ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒருசேர பரவத் தொடங்கி இருந்தன. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.
தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியைவிட தொலைந்துபோன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டின.
ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒருசேர பரவத் தொடங்கி இருந்தன. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியைவிட தொலைந்துபோன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டின.
இவை எது பற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுது புலர்ந்த போதுகூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

அந்த நாள்களில் ராமேஸ்வரம் செல்வதற்குத் தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

மற்றுமொரு கொடுமையான விஷயம், குடிநீரும் உணவுப் பொருள்களும் பிற பகுதிகளிலிருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
இவை எது பற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுது புலர்ந்த போதுகூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாள்களில் ராமேஸ்வரம் செல்வதற்குத் தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே. மற்றுமொரு கொடுமையான விஷயம், குடிநீரும் உணவுப் பொருள்களும் பிற பகுதிகளிலிருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இந்திய அரசின் உதவியை நாடினார். 

நிலைமையைப் புரிந்துகொண்ட இந்திய அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை `தேசியப் பேரிழப்பு’' என்று அறிவித்தது.
ராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன.
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்துகொண்ட இந்திய அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை `தேசியப் பேரிழப்பு’' என்று அறிவித்தது. ராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன.
முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக்குழுவும் களத்தில் இறங்கியது.

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்த காரணத்தால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக்குழுவும் களத்தில் இறங்கியது. அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்த காரணத்தால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
`காப்பாற்றப்பட்ட மக்களைவிட கண்டெடுக்கப்பட்ட சடலங்களே அதிகம்’ என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்
`காப்பாற்றப்பட்ட மக்களைவிட கண்டெடுக்கப்பட்ட சடலங்களே அதிகம்’ என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்
உயிர்பிழைத்த பூமாரி கணவருடன் ...



எஞ்சிய தனுஷ்கோடியை `சாரதா’ என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும்கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
.
உயிர்பிழைத்த பூமாரி கணவருடன் ... எஞ்சிய தனுஷ்கோடியை `சாரதா’ என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும்கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை. .
மூன்றாம் நாள் தான் அரசாங்கத்துக்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.

மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் ரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.
.
மூன்றாம் நாள் தான் அரசாங்கத்துக்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் ரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர். .
ரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.
ரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.
தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாள்களுக்கு மேல் ஆனது. இந்தியாவை நிலைகுலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும்போது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியிருக்கிறது.
தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாள்களுக்கு மேல் ஆனது. இந்தியாவை நிலைகுலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும்போது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியிருக்கிறது.
விளைவு 1,500 மக்களின் உயிரைக் குடித்தது. 1,500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப்போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில்தான் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.

'`ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக’' ஐ.நா சபை இந்தச் சம்பவத்தை அறிவித்தது..
விளைவு 1,500 மக்களின் உயிரைக் குடித்தது. 1,500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப்போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில்தான் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. '`ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக’' ஐ.நா சபை இந்தச் சம்பவத்தை அறிவித்தது..
அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.

அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்காண முடியாமல் போனது.
அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்காண முடியாமல் போனது.
மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை '`மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்’' என்று அறிவித்தது.

தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.
மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை '`மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்’' என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.
ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச்சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து,'`மக்கள் வாழத் தகுதியற்ற...’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச்சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து,'`மக்கள் வாழத் தகுதியற்ற...’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
`மக்கள் வாழத் தகுதியற்ற...’ என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.
இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல்தான் கழிகின்றன, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.
`மக்கள் வாழத் தகுதியற்ற...’ என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல்தான் கழிகின்றன, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுகள் தான் இவர்களது நீர் ஆதாரம்.

சமையல் பொருள்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்துவரும் மீனவர்கள்.
மீன்பிடித் தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருள்கள் செய்தும் பிழைப்பு நடத்திவருகிறார்கள். இந்த இடத்தைவிட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுகள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருள்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்துவரும் மீனவர்கள். மீன்பிடித் தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருள்கள் செய்தும் பிழைப்பு நடத்திவருகிறார்கள். இந்த இடத்தைவிட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.
வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், `மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்றும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன. சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், `மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்றும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.  வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
ஆண்டுதோறும் இதேநாளில் கடலுக்குள் மூழ்கிய உயிர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆண்டுதோறும் இதேநாளில் கடலுக்குள் மூழ்கிய உயிர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அடுத்த கட்டுரைக்கு