Published:Updated:

'காற்றில் கரைந்த கலைஞன் காட்சிப்படுத்திய அழியாத தருணங்கள்!' எம்.விஜயகுமார் நினைவலைகள்!

சமீபத்தில் உயிரிழந்தார் விகடன் புகைப்படக்கலைஞர் எம்.விஜயகுமார். அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொல்குடிகள், காட்டுயிர்கள், என இவரது கேமரா பலரையும் புகைப்படம் எடுத்திருக்கிறது. எளிய மனிதர்களின் குரலை, அவர்தம் துயரை தனது புகைப்படத்தின் வழியே வெளிக்கொண்டு வந்தவர்.

“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது."
- புகைப்படக் கலைஞர் எம்.விஜயகுமார்
அடுத்த கட்டுரைக்கு