Published:Updated:

கல்லறைகள் மத்தியில் குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் குடும்பம்..! #VikatanPhotoStory

கல்லறைகள் அமைந்துள்ள பகுதி வழியாகவே பொதுமக்கள் செல்ல பயப்படும் இந்த சூழ்நிலையில், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள இடுகாட்டு கல்லறைகளின் நடுவிலே குழந்தைகளுடன் ஆண்டாண்டு காலமாக வாழ்கிறது இந்தக் குடும்பம்.

கல்லறையை படிப்பறையாக பயன்படுத்தும் சிறுமி.

தேர்வுக்கு படிக்க படிப்பறை இல்லாத காரணத்தால் அங்குள்ள கல்லறையை படிப்பறையாக பயன்படுத்தும் சிறுமி. அரசுப் பள்ளியில் பயிலும் இந்த சிறுமிதான் வகுப்பில் முதல் மாணவி

கைப்பேசி வழியாகவே விருப்ப உணவுகளை வரவழைத்து உண்ணும் நம்மவர்கள் மத்தியில், ரேசன் அரிசியை மட்டுமே சமைத்து சாப்பிடும் குடும்பம். (தற்போது புதுச்சேரி அரசு, அந்த ரேசன் அரிசியையும் வழங்கவில்லை)

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் புதைக்கப்பட்ட சமாதி, பூ மாலை கூட வாடவில்லை. இருந்தாலும் கூட பயமின்றி மகிழ்சியுடன் விளையாடும் குழந்தைகள்

அன்னை குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு தாய் வீட்டு வேலைகளுக்காக வெளியே சென்றுவிட்டதால் கல்லறைகளை காட்டி குழந்தைக்கு உணவு ஊட்டும் சகோதரன்

`பள்ளி விடுமுறை நாட்களில் மர நிழலில் ஒரு குட்டி தூக்கம்… தரையில் விரிக்க கோரைப்பாய் இல்லாததால் பூத உடலைத் தாங்கிய ஓலைப் பாய்தான் எங்களையும் தாங்குகிறது.'

இரவு நேரங்களில் விஷ உயிரினங்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள படுக்கைக்கு பயன்படுத்தும் இடங்களை சுத்தம் செய்யும் சிறுவன்

கல்லறைகள்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம். ``இங்கு ஓடிப்பிடித்து விளையாடும் போது கல்லறைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டால் எங்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்" என மகிழ்சியுடன் கூறுகின்றனர் பயமறியாத குழந்தைகள்

எங்களுக்கு அமர்ந்து உணவு உண்ண ``டைனிங் டேபிள்” கிடையாது. ஆனால் கல்லறைகளை டேபிளாக மாற்றி சகோதரிகளுடன் சேர்ந்து சாப்பிடுவது மிகவும் ஆனந்தம்"

கல்லறைத் தோட்டத்தில் உள்ள கருமாதி கொட்டகை அருகே மரத்தில் கட்டப்பட்ட தொட்டிலில் அண்ணனுடன் ஆழ்ந்த தூக்கத்தில் குழந்தை

``மாடி வீடுகளில் உள்ளவர்களுக்கு கூட விளையாட இடமிருக்காது. ஆனால் எங்களுக்கு பல ஏக்கரில் அமைந்துள்ள இடுகாடு முழுவதும் எங்கள் விளையாட்டு களம்தான். யாருடைய தொந்தரவும் இங்கு கிடையாது"

வாழ்கை முடியுமிடம் கல்லறை என்பார்கள். ஆனால் எங்களுக்கு வாழ்வு தொடங்குமிடமே கல்லறைதான். எங்கள் வீடு, உணவிடம், படிப்பு, விளையாட்டு அனைத்தும் இந்த கல்லறைகளிலேயே முடங்கி கிடக்கின்றன.

இந்த கல்லறை வாழ்க்கை நம்மோடு முடிந்துவிட வேண்டும். அடுத்த சந்ததியினருக்கு தொடரக் கூடாது என்ற உறுதியுடன் மேல் படிப்புக்கு தயாராகும் மாணவன் (கல்லறை மேலிருந்து…)