Published:Updated:

`சாகுறவரை நாலு பேருக்கு நல்லது செய்வோம்!’ - பிச்சை எடுத்து லட்சங்களில் சேவை செய்யும் தாத்தா

முதியவர் பூல்பாண்டி
News
முதியவர் பூல்பாண்டி

``நாலு நாள்ல 10,000 ரூபாய் கைக்கு சேர்ந்துடும். சாப்பாடும் யாராவது புண்ணியவான் கொடுத்திடுறாங்க. சாகுற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணிகிட்டே இருப்பேன். இப்போ இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அனுப்பி வெச்சிக்கிட்டு வர்றேன்’’ என்றார், மன நிறைவான புன்னகையோடு.

`சாகுறவரை நாலு பேருக்கு நல்லது செய்வோம்!’ - பிச்சை எடுத்து லட்சங்களில் சேவை செய்யும் தாத்தா

``நாலு நாள்ல 10,000 ரூபாய் கைக்கு சேர்ந்துடும். சாப்பாடும் யாராவது புண்ணியவான் கொடுத்திடுறாங்க. சாகுற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணிகிட்டே இருப்பேன். இப்போ இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அனுப்பி வெச்சிக்கிட்டு வர்றேன்’’ என்றார், மன நிறைவான புன்னகையோடு.

Published:Updated:
முதியவர் பூல்பாண்டி
News
முதியவர் பூல்பாண்டி

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 72 வயதாகும் முதியவர் பூல்பாண்டி. இவர், துறவறம் பூண்டு கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று, யாசகம் பெற்று வாழ்க்கையை நகர்த்துகிறார். உணவுக்குப் போக கையிலிருக்கும் மீதித் தொகையைக் கொண்டு பொதுச் சேவையாற்றுகிறார்.

பல ஊர்களில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியர்களிடம் நிதியுதவி அளித்திருக்கிறார். கொரோனா பொது முடக்கத்தின்போதும், தன்னிடமிருந்த லட்சக்கணக்கான ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி யிருக்கிறார். இந்த நிலையில் அவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வந்தார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனைச் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க தன்னால் முடிந்த 10,000 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கினார்.

சேவை செய்யும் பூல்பாண்டி தாத்தா
சேவை செய்யும் பூல்பாண்டி தாத்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரிடம் பேசினோம். ``எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடிங்க. குடும்ப வறுமையால 1980-ல பாம்பேவுக்குப் போனேன். அங்க அயர்ன் கடை போட்டு பொழப்பு நடத்துனேன். கையில கொஞ்ச காசு சேர்ந்தப்போ, கல்யாணம் பண்ணிகிட்டேன். அன்பான மனைவி. அவ இருக்கிற வரைக்கும் வாழ்க்கையில நிம்மதியா இருந்தேன். ரெண்டு பொண்ணு, ஒரு பையன் பொறந்தாங்க. நல்லா படிக்க வெச்சு, கல்யாணமும் பண்ணி வெச்சேன். ஒரு பொண்ணு பாளையங்கோட்டையிலயும், இன்னொரு பொண்ணு மெட்ராஸ் சைதாப்பேட்டையிலயும், பையன் கோயம்புத்தூருலயும் புள்ளை, குட்டிங்களோடு நல்லாயிருக்கிறாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொண்டாட்டி இறந்துபோன பின்னாடி பசங்க என்னை கைவிட்டுட்டாங்க. சரி, அவங்களுக்குப் பாரமா இருக்க வேண்டாம்னு நானும் வீட்டுலருந்து வெளிய வந்துட்டேன். இன்னையோடு 13 வருஷம் ஓடிடுச்சு. பசங்க நல்லாயிருக்கட்டும். ஆனா, சின்ன வருத்தம். பெத்தவங்களை யாரும் கைவிட்டுறாதீங்க சாமி. வயசான காலத்துல அவங்கள பக்கத்துல வெச்சு ஒருவேளை சோறு போடுங்க, அது போதும். அவங்க ஒரு மூலையில வாழ்ந்துட்டுப் போய்டுவாங்க.

உதவி
உதவி
சாகுற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணிகிட்டே இருப்பேன்.
முதியவர்

இத்தனை வருஷத்துல தமிழ்நாடு முழுக்க சுத்தி வந்துட்டேன். யாசகம் கேட்டு சேமிக்கிற பணத்துல 400 பள்ளிகளுக்கும் மேலயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மேசைப் பொருள்னு முடிஞ்சளவு உதவி பண்ணியிருக்கிறேன். இதுக்கு முன்னயிருந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்துல, 7 லட்சம் ரூபாய் வரைக்கும் நிவாரண நிதி அனுப்பி வெச்சேன். இப்போ, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அனுப்பி வெச்சிக்கிட்டு வர்றேன். ஒரு நாலு நாள்ல 10,000 ரூபாய் கைக்கு சேர்ந்துடும். சாப்பாடும் யாராவது புண்ணியவான் கொடுத்திடுறாங்க. சாகுற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணிகிட்டே இருப்பேன்’’ என்றார் மன நிறைவான புன்னகையோடு.