Published:Updated:

காட்டுமாடுகளை வேட்டையாடியவர்களில் 3 பேர் சிக்கினர்; 6 பேருக்கு வலைவீச்சு

தேனி மாவட்டம், கோம்பைத்தொழு வனப்பகுதியில் காட்டுமாடுகளை வேட்டையாடியவர்களில் 3 பேர் சிக்கினர். தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த 26-ம் தேதி, தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு வனப்பகுதியில், காட்டுமாடு வேட்டையாடப்பட்டிருப்பதாக வனத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தீவிரத் தேடுதல் நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அமர்ந்திருந்த சிலரைக் கண்டனர். வனத்துறையினரை கண்டவுடன் ஓட்டம்பிடித்தவர்களை விரட்டியதில் கணேசன், ராஜகோபால் ஆகிய இருவர் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேட்டை நாய்கள் உதவியுடன் காட்டுமாடு வேட்டை நடத்தியதும், கறியைச் சமைக்க இருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த வனத்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அரண்மனைப் புதூரைச் சேர்ந்த ஜீவா என்பரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 9 பேர் காட்டுமாடு வேட்டைக்குச் சென்றதாகவும், மீதமுள்ள 6 பேரை தேடி வருவதாகவும் வனத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்பைத்தொழு பகுதியில் காட்டுமாடு கறி விற்பனை செய்யும் கும்பல் இதுதானா? அல்லது வேறு ஏதேனும் கும்பல் இருக்கிறதா என்ற கோணத்தில் வனத்துறை விசாரணை செய்ய வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.