Published:Updated:

பச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்!

சென்னையில் வீட்டில் பச்சைக்கிளிகளை வளர்த்த வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (36). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவர் வீட்டில் பச்சைக் கிளி வளர்ப்பதாக சென்னை கிண்டி வனத்துறை வனச்சரகர் மோகன் என்பவருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்றனர். வேல்முருகன் வீட்டில் ஆய்வு செய்தபோது 2 பச்சைக்கிளிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வனத்துறையினருக்குத் தெரியாமல் பச்சைக்கிளிகளை வளர்த்து விற்பனை செய்த வேல்முருகனுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி தடை செய்யப்பட்ட பட்டியல் நான்கில் வன உயிரினம் பச்சைக்கிளி வருகிறது. அதை வீட்டில் வளர்த்ததற்காக ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளோம். மேலும் அவரின் வீட்டிலிருந்து இரண்டு பச்சைக்கிளிகளையும் மீட்டு கிண்டிக்கு கொண்டுவந்துள்ளோம்" என்றனர்.