Published:Updated:

‘பரிதாபமாக இறந்த 3 வயது மஹாவீர் புலி!’ -அதிர்ச்சியளிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

‘பரிதாபமாக இறந்த 3 வயது மஹாவீர் புலி!’ -அதிர்ச்சியளிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்
‘பரிதாபமாக இறந்த 3 வயது மஹாவீர் புலி!’ -அதிர்ச்சியளிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

கடந்த வாரம், ஒடிசாவில் உள்ள வனப் பகுதியில் இறந்த மஹாவீர் புலியின் அதிர்ச்சியளிக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

‘பரிதாபமாக இறந்த 3 வயது மஹாவீர் புலி!’ -அதிர்ச்சியளிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

File Photo

மஹாராஷ்டிராவின் யாவத்மலா பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள 13 பேரை அவ்னி என்ற பெண் புலி தாக்கியதால், அந்தப் புலியை சுட்டுக் கொல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த 2-ம் தேதி அவ்னி புலியைக் கொன்றதாக வனத்துறையினர் அறிவித்தனர். இதையடுத்து, லக்னோவில் உள்ள மற்றொரு பெண் புலி, அப்பகுதி இளைஞரைத் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டுப் பகுதிக்குச் சென்று அந்தப் புலியை தேடிக் கண்டுபிடித்து டிராக்டர் ஏற்றிக் கொலைசெய்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டுவருகிறது. மூன்றாவதாக, கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிராவின் ஜுனானோ வனப்பகுதியில் உள்ள இரண்டு புலிகள் மீது ரயில் மோதி, அவை பரிதாபமாக உயிரிழந்தன. இதன் வரிசையில் ஒடிசாவின் சட்கோஷியா புலிகள் சரணாலயத்தில் இருந்த மஹாவீர் என்ற புலியும் இறந்துள்ளது. 

ராயல் பெங்கால் மஹாவீர் என அழைக்கப்படும் மூன்று வயதான ஆண் புலி ஒன்று, மத்தியப்பிரதேசத்தின் கன்ஹா பகுதியிலிருந்து ஒடிசாவின் சட்கோஷியா புலிகள் சரணாலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தப் புலி, நவம்பர் 14-ம் தேதி சரணாலயத்தில் இறந்த நிலையில் கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து புலிகள் தாக்கப்பட்டுவருவதால், இந்தப் புலியின் இறப்பு கொலையா அல்லது தானாக இறந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது, மஹாவீர் புலியின் பிரேதப் பரிசோதனையில், உடல்நிலை பாதிப்பினால்தான் இந்தப் புலி உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான காரணம் சற்று அதிர்ச்சியளிக்கிறது. 

மூன்று வயதே ஆன மஹாவீர் புலியின் உடலில் உள்ள பல்வேறு பாகங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, செயலிழந்ததன் காரணமாகவே இறந்துள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனையின்போது அதன் வயிற்றில் இருந்து 8 முள்ளம்பன்றியின் இறகுகள், காட்டுப் பன்றியின் முடிகள் போன்றவை இருந்துள்ளது. இருப்பினும், சில பரிசோதனைகளுக்காகப் புலியின் திசுக்கள் வெளியில் அனுப்பப்பட உள்ளன. இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிக அளவில் புலிகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.