Published:Updated:

ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”

ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”

எதிரொலி

25.9.18-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில்... ‘ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... `50 லட்சம் வருமானம்! பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை’ என்ற தலைப்பில்... ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகியோரின் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில், ஒரு லிட்டர் நாட்டு மாட்டுப்பாலின் விலை 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பசுமை விகடன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட வாசகர்கள் பலர், ‘நாட்டு மாட்டுப்பாலை லிட்டர் 100 ரூபாய் என விற்பனை செய்ய முடியுமா... இந்த விலை கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவர்களது சந்தேகங்களைப் போக்கும் விதமாக... ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் நாட்டு மாட்டுப்பாலைத் தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தி வரும் சிலரிடம் பேசினோம்.

ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”

யுகப்ரீத்தா துரைசாமி, ஜி.வி.ரெசிடென்ஸி, கோயம்புத்தூர்: “நாங்க முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துல விளைஞ்ச அரிசி, சர்க்கரை, காய்கறிகளைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறோம். எங்க ரெண்டு குழந்தைகளுக்கும் நாட்டுப் பசும்பால்தான் கொடுக்கிறோம். ஒரு லிட்டர் 100 ரூபாய்னு தினமும் ஒன்றரை லிட்டர் பால் வாங்குறோம். நாட்டுப்பசும்பால் தயிர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கு. அதனால, சாப்பாட்டுக்கு மட்டுமில்லாம இட்லி, தோசைக்கும்கூட நாங்க இந்த தயிரைத் தொட்டு சாப்பிடுவோம். பால் விலை கொஞ்சம் அதிகமா இருந்தாலும் ஆரோக்கியம் முக்கியங்கிறதாலதான் நாட்டுப்பசும்பாலை இந்த விலை கொடுத்து வாங்குறோம்.’’

உமா திலகவதி, பாலன் நகர், பீளமேடு, கோயம்புத்தூர்: “ஏழு வருஷமா எங்க வீட்ல நாட்டுப்பசும்பாலைத்தான் பயன்படுத்தறோம். ஒரு லிட்டர் 100 ரூபாய்னு தினமும் 1 லிட்டர் பால் வாங்குறோம். குழந்தைகளுக்குப் போக மீதியிருக்குற பாலைத் தயிர், மோர், நெய்னு மாத்திக்கிறோம். முன்னாடி 50 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற பொங்கலூர்ல இருந்து ஒருத்தர் பஸ்ல எங்களுக்கு நாட்டுப்பசும்பால் கொடுத்து விட்டுட்டுருந்தார். தினமும் பஸ் ஸ்டாண்டுல காத்திருந்து பால் கேனை வாங்கிட்டு வருவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”

இந்தத் தம்பிங்க, வீட்டுக்கே கொண்டு வந்து பால் கொடுக்குறதாச் சொன்னாங்க. அது எங்களுக்கு வசதியாப்படவும் ஏழு மாசமா இவங்கிட்டதான் வாங்கிட்டுருக்கோம்.”

- ஜி.பழனிச்சாமி