Published:Updated:

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

Published:Updated:
உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

ந்தியாவிலேயே முதல் விலங்குகள் ரத்த வங்கி சென்னையில்!

அரசு மருத்துவமனை. காலை 11 மணி. “டாக்டர், நேத்துல இருந்து குடம் குடமா ரத்தம் போயிட்டே இருக்கு. எப்படியாவது புள்ளையக் காப்பாத்துங்க” என்று கலங்கிய கண்களுடன் மருத்துவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் அந்த வயதான தாய். 

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

 “பிரசவம் நடந்த பிறகு, கர்ப்பப்பையில இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு. அதான் ரத்தமும் சீழுமா போயிட்டே இருக்கு. இப்போ அட்மிட் பண்ணிருங்க. நாளைக்கு ஆபரேஷன் செஞ்சு கர்ப்பப்பைய எடுத்திரலாம். ரத்தம் நிறைய போனதுனால, ஆபரேஷனுக்கு அப்புறம் ரத்தம் ஏத்த வேண்டியிருக்கும். ஒண்ணும் பயப்படாதீங்க, காப்பாத்திரலாம்!” என்றார் மருத்துவர்.

 இந்தச் சம்பவம் நடைபெற்றது கால்நடை மருத்துவமனையில். தான் அன்பாக வளர்க்கும் கறுப்பு நிற பெண் நாயைக் காப்பாற்றச் சொல்லித்தான் மருத்துவரிடம் போராடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.

 ரத்த இழப்பு, ரத்த தானம், ரத்தப் பரிமாற்றம் ஆகியவை மனிதர்களுக்கான சிகிச்சையில் சர்வ சாதாரணம். செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சையிலும் இதெல்லாம் உண்டா? ஆமாம்! நாய், பூனை, பசு முதல் அத்தனை விலங்குகளுக்கும் ரத்தத்தின் தேவை ஏற்படக்கூடும். இந்தியாவில் ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் செல்லப் பிராணிகள் கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றன. அவ்வாறு சிகிச்சை பெறும் செல்லப் பிராணிகளில் ரத்தத்தின் தேவை உள்ள பிராணிகளும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

 அதன் தேவையை உணர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், ‘மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’யில்  விலங்குகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விலங்குகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ள முதல் ரத்த வங்கி இதுதான். ஆசியாவிலேயே அதிக அளவில் விலங்குகளுக்கான ரத்தப்பரிமாற்றம்  நடைபெறும் வங்கியும் இதுதான். 

உங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா?

ஆதி காலத்திலிருந்தே மனிதனின் உற்ற தோழன் நாய்தான். தனி வீடுகள் அருகி, அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்டாலும், நாய் வளர்க்கும் ஆர்வம் மட்டும் குறையவேயில்லை. பிற செல்லப் பிராணிகளைக் காட்டிலும் நாய்களே அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுவதால், அதன் ரத்தத்துக்குத்தான் தேவையும் அதிகமாக உள்ளது.

 “உடலில் தொற்றியிருக்கும் உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் ரத்தசோகை தான் நாய்களுக்கு ரத்த இழப்புக்கான முக்கியக் காரணம். வாழ்க்கைமுறை மாற்றத்தால் இன்று நாம் எதிர் கொள்ளும் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தீவிரம் நாய்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த நோய்களால் ஏற்படும் சிக்கல்கள், சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத்தின் தேவை அதிகமாக உள்ளது. இதுதவிர, சாலை விபத்துகள், தொற்று நோய்களால் பாதிக்கப்படும் நாய்களுக்கும் ரத்த இழப்பு ஏற்படுகிறது.

 மனிதர்களுக்கு ஏ, பி, ஓ, ஏபி என்று நான்கு முக்கிய வகையான ரத்தப் பிரிவுகள் உண்டு. நாய்களுக்கு ரத்தப்பிரிவின் எண்ணிக்கை 13. நாய்களில் ‘டிஇஏ 1.1 நெகட்டிவ்’ (DEA 1.1-ve) ரத்தத்தைக் கொண்டவை தான் ‘யுனிவர்சல் டோனர்’.  மனிதர்களைப் போன்று 350 மில்லி ரத்தம் மட்டுமே நாய்களிடம் இருந்தும் எடுப்பார்கள்.  ரத்தம் சேகரிக்கப்பட்ட பிறகு, அதன் தரத்தைப் பரிசோதித்து, பதப்படுத்து வதற்கான அனைத்துத் தொழில்நுட்பங்களும் ரத்த வங்கியில் உள்ளன. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, பிளேட்லெட் போன்ற கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தும் சேகரிக்கும் வசதியும் உள்ளது” என்கிறார் ரத்தவங்கியின் அலுவலர் டாக்டர் ஜி.ஆர்..பரணிதரன்.
 
 மனிதர்கள் தானாகச் சென்று ரத்தம் கொடுப்பார்கள். நாய்களால் ‘ஆடு மாடு மேல உள்ள பாசம்... வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும்...’ என்ற பாடல் வரிகள் விலங்குகள்மீதான நமது பாசத்துக்குச் சான்று. ரேஷன் கார்டில் உங்கள் செல்லப்பிராணியின் பெயரைச் சேர்க்கிறீர்களோ இல்லையோ, ரத்த தானப் பதிவேட்டில் மறக்காமல் சேர்த்துவிடுங்கள்!

ஜெனி ஃப்ரீடா - படம்: வீ.நாகமணி

*தானம் அளிக்கும் நாய், ஒன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்க வேண்டும்.

*எடை 20 கிலோவுக்கும் கூடுதலாக இருக்க வேண்டும்.

*அனைத்துத் தடுப்பூசிகளும் போட்டிருக்க வேண்டும்.

*குடற்புழு நீக்கத்துக்கான மருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

*ரத்ததானம் அளிக்கும் நாய் ஆரோக்கியமாக, இருக்க வேண்டும்.

*குறிப்பாக உடலில் உண்ணி தொந்தரவு இருக்கவே கூடாது.

*ஏற்கெனவே ரத்தப் பரிமாற்றம் செய்திருக்கக் கூடாது.

*மூன்று மாதங்களுக்குள் ரத்ததானம் செய்திருக்கக் கூடாது.

*பெண் நாயாக இருந்தால், தானம் செய்யும்போது கர்ப்பமாகவோ, பிரசவித்திருக்கவோ கூடாது.