Published:Updated:

`தாகமும் தண்ணீரும்’ - இணையத்தில் வைரலான கோலா கரடி

`தாகமும் தண்ணீரும்’ - இணையத்தில் வைரலான கோலா கரடி
`தாகமும் தண்ணீரும்’ - இணையத்தில் வைரலான கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் தாகத்தால் தவித்த கோலா கரடிக்குப் பெண் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவில் தற்போது கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. இந்த நிலையில்தான் சாலை ஓரம் மரத்தில் இருக்கும் கோலா கரடிக்குப் பெண் ஒருவர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் காட்சி வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்த கோலா கரடியைப் பார்த்த பெண் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் அருகே சென்றுள்ளார். அந்தப்பெண்ணைக் கண்டதும் அந்தக் கரடி மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறது. அந்தப்பெண் தான் கொண்டுவந்திருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை கரடிக்குக் கொடுக்கிறார். அதைக் குடித்துவிட்டு கரடி மீண்டும் மரத்தின் மீது ஏறிக்கொள்கிறது. இந்தக்காட்சியை காரில் இருந்த மற்றொருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


கோலா கரடியானது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. சாதுவான குணம் கொண்ட இது மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது. அழிந்து வரும் உயிரினமான இது ஆஸ்திரேலியாவின் முக்கிய சின்னமாக பார்க்கப்படுகிறது.