Published:Updated:

யானைகள் மீதா குற்றம்?

யானைகள் மீதா குற்றம்?
பிரீமியம் ஸ்டோரி
யானைகள் மீதா குற்றம்?

யானைகள் மீதா குற்றம்?

யானைகள் மீதா குற்றம்?

யானைகள் மீதா குற்றம்?

Published:Updated:
யானைகள் மீதா குற்றம்?
பிரீமியம் ஸ்டோரி
யானைகள் மீதா குற்றம்?

சிலவாரங்களாக வனத்துறைக்குத் தண்ணி காட்டிய சின்னத்தம்பி ஒருவழியாகப் பிடிபட்டுவிட்டான். இனி அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது. சின்னத்தம்பியை முன்வைத்தாவது நாம் காடுகளையும் கானுயிர்களையும் காக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசத்தான் வேண்டும்.  

யானைகள் மீதா குற்றம்?

இந்தியா முழுவதும் ஓராண்டுக்கு, மனித - விலங்கு மோதலில் 400 மனிதர்களும், 100 யானைகளும் தங்களுடைய உயிரை இழந்து வருகிறார்கள். நான்கு லட்சம் குடும்பங்கள் சேதங்களைச் சந்தித்து வருகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கோவையை எடுத்துக் கொண்டால் 1999-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மனித - விலங்கு மோதலில் 191 யானைகளும், 143 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 2016-ம் ஆண்டிலிருந்து கோவையில் ஐந்து யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வனப்பகுதிகளுக்கு வெளியில் வைத்துதான் மோதல்கள் நடந்துள்ளன. அதுவும் மாலை 6 மணிக்குப் பிறகே அதிக விபத்துகள் நடக்கின்றன. மனிதர்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர் தான் அதிகம் இறக்கின்றனர். உயிரிழந்தவர்களில் மது அருந்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பெண் யானைகளைவிட, ஆண் யானைகளே உயிரைப் பறிகொடுக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யானைகள் மீதா குற்றம்?

குறைந்துவரும் வனத்தின் வளம், யானை வழித்தட ஆக்கிரமிப்புகள், வனத்துக்கும், நமக்குமான இடைவெளி குறைந்துவருவது என்று இந்த மோதல்களுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. கோவை வனப்பகுதிகள் பெரும்பாலும் சரிவான பகுதியில் இருக்கின்றன. அதிலும், பல்வேறு கட்டடங்கள் முளைத்துவிட்டன. ஒரு யானை நாளொன்றுக்கு 16 மணி நேரம் சாப்பிட வேண்டும். 250 கிலோ உணவு தேவை. யானைகளை வெளியில் வரவைப்பதே நாம்தாம் என்கின்றனர் கானுயிர் ஆர்வலர்கள்.

யானைகள் மீதா குற்றம்?“நமது நாட்டில் வனப்பகுதி என்பது மிகவும் குறைவு. வனப்பகுதியைச் சுற்றி ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்துவருகின்றன. முதலில் நாம் காடுகளைக் காப்பாற்ற வேண்டும்.  நாங்கள் ஆராய்ச்சி செய்த வரையில், பெரும்பாலான இடங்களில் யானைகள் வருவது மக்களுக்குத் தெரியாததால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. யானைகளை இடமாற்றம் செய்வது என்பது இதற்குத் தீர்வைக் கொடுத்துவிடாது. ஓர் ஆண் யானை சுற்றித்திரிய 700 சதுர கி.மீ பரப்பளவு இடம் வேண்டும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. ஆனால், கோவை வனப்பகுதிப் பரப்பளவு 693 சதுர கி.மீ தான். நம் வனப்பகுதி ஒரு யானைக்கே போதாது என்பதுதான் உண்மை” என்கிறார் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆனந்த்.

சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ், “தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள்தாம் அரசாங்கத்துக்கு அதிகளவு செங்கல்களைக் கொடுக்கின்றன. இதனால், அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஓடைகள், செடிகொடிகள் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். எனவே, அங்கு விதிமுறையை மீறி மண் எடுத்த இடங்களுக்குப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள், ‘எங்களுடைய பட்டா நிலத்தில் யானை வரக்கூடாது’ என்று சொல்கிறார்கள். யானைகள் அண்ணா சாலைக்கு வருவது கிடையாது.  கடற்கரையிலோ, அண்ணா சாலையிலோ எப்படி விவசாயம் செய்ய முடியாதோ, அதேபோல, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாது. இதை விவசாயிகளும் உணரவேண்டும்” என்று விவரித்தார்.  

யானைகள் மீதா குற்றம்?

கோவை முதன்மை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சஸவா, “வனப்பகுதியிலிருந்து, பட்டா நிலத்துக்கு 40 மீட்டர் முதல் 60 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான இடங்களில், இது கடைப்பிடிக்கப்படுவதில்லை. பட்டா நிலங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு (Reserve forest) மிகவும் அருகில் வந்துவிட்டன. இதுதான், பிரச்னைக்கு முக்கிய காரணம். மேலும்,  காட்டில் அதற்கான உணவு மற்றும் தண்ணீர் குறைந்துவிட்டன. அந்த நேரத்தில் வெளிவரும் யானைகள் பயிர்களைச் சாப்பிடத் தொடங்கிவிட்டன” என்கிறார்.    

யானைகள் மீதா குற்றம்?

ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி வன உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், “முன்பெல்லாம், கோடைக்காலங்களில்தான் யானைகள் கோவை நோக்கி வரும். ஆனால், மானாவாரிப் பயிராக இருந்த விவசாயம், நிரந்தரப் பயிருக்கு மாறிவிட்டது. பல்வேறு கட்டடங்கள் வந்துவிட்டன. யானை மடு, யானைப் பள்ளம் என்று அதற்கு உதவியாக இருந்த இடங்களில் எல்லாம் தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டோம்.  

யானைகள் மீதா குற்றம்?

யானைகளால் அதிக இழப்பு ஏற்படுவது பழங்குடி மக்களுக்குத்தான். ஆனால் இழப்புகள் அதிகம் இருந்தாலும், அந்த மக்கள் யானைகளுடன் வாழப் பழகிவிட்டனர். அந்த மக்களுக்கு இருக்கும் புரிந்துணர்வு அனைவருக்கும் வரவேண்டும். இணைந்து வாழ்தல் என்ற மனநிலைக்கு நாமும் மாறவேண்டும். வனப்பகுதியில் முன்பிருந்த இடைத் தாங்கல் மண்டலம் (BufferZone) என்ற முறை இப்போது இல்லை. விவசாய நிலங்களில் யானைகளை விரட்ட முன்பு கையாளப்பட்ட அணுகுமுறைகள் மாறிவிட்டன. மதுக்கரை மகராஜ், விநாயகன், சின்னத்தம்பி யானைகளுடன் இந்தப் பிரச்னை முடிந்துவிடாது. எனவே, கோவை போன்ற பகுதிகளுக்கென்று சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்” என்கிறார்.

யானைகள் மீதா குற்றம்?பதுவன் என்ற பழங்குடி விவசாயி, “எங்க பயிரும் சேதமடையும் சாமி. ஆனா, யானைக்கு நம்மள மாதிரி ரெண்டு கையா இருக்கு? அதுக்கு ஒரே ஒரு தும்பிக்கைதான் இருக்கு. ரெண்டு கை இருக்கற நம்மளே பணம் சம்பாதிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இவ்வளவு ஓடும்போது, ஒரே ஒரு கையோட இருக்கற அவங்க எங்க போவாங்க? யானைங்க எங்க பயிர சாப்பிடறத நாங்க தானமாதான் பார்க்கிறோம். ஒரு விளைச்சல்ல அறுவடை குறைஞ்சாலும், அடுத்த விளைச்சல்ல அறுவடை அதிகமா கிடைக்கும். ஆனா, சேதங்களுக்கு இழப்பீடு வாங்கறதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு தடவையும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று எல்லாம் எழுதிக் கொடுக்கிறோம். இழப்பீடு கிடைக்கறதே இல்ல” என்கிறார்.

இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழும் பழங்குடிகளுக்கு இருக்கும் புரிந்துணர்வு எல்லோருக்கும் வருவதே, தீர்வின் திசைவழி.

இரா.குருபிரசாத் - படங்கள்: தி.விஜய்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism