Published:Updated:

"அதிகாரிகளின் மிருகத்தனம்" - சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

"அதிகாரிகளின் மிருகத்தனம்" - சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!
"அதிகாரிகளின் மிருகத்தனம்" - சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கோவையில் இருந்து டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, தன் குடும்பத்தைத் தேடி பழநி அருகே சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களில் சின்னத்தம்பி பல கிராமங்களைக் கடந்தாலும், அவனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. சின்னத்தம்பியின் செயல்களைக் கண்டு, வனத்துறை ஊழியர்களே நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, சின்னத்தம்பி யானை வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பதால், அதை மீண்டும் பிடித்து, கூண்டில் அடைத்து, கும்கியாக மாற்றப் பயிற்சி கொடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சின்னத்தம்பி யானையை. கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் சின்னத்தம்பி ஆதரவாகப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், “வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது. தனது சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையைத் துன்புறுத்துவது போல, அதைக் கும்கியாக்குவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருக்கத்தமானது. இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சின்னத்தம்பி யானையைத் கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் சின்னத்தம்பி பாதுகாப்பு குழு சார்பில் திங்கள் கிழமை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.