Published:Updated:

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”
பிரீமியம் ஸ்டோரி
“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

Published:Updated:
“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”
பிரீமியம் ஸ்டோரி
“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

‘மக்களை முதலில் பறவைகளைப் பார்க்கப் பழக்க வேண்டும்; பிறகு காக்கப் பழக்க வேண்டும்” - பறவை ஆய்வாளர் ப.ஜெகநாதன் வலியுறுத்தும் அடிப்படை இது. இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாகக் காட்டுயிர் இயலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி...

``முன்பு குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள், உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தோம். தொலைக்காட்சி, கைப்பேசிகள் இப்போது நம்மை ஓரிடத்தில் முடக்கி வைக்கின்றன. அதிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்பட, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்க, பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள் என எந்த உயிரினமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையை ரசிக்க வைக்க வேண்டும். அதன்மூலம் பறவைகளை மட்டுமல்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களிடம் தோன்றும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப்படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.

அதையும் தாண்டி, இதில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணைகட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலைபோட நேர்ந்தாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் பறவை நோக்குதல் மிகப்பெரிய பங்காற்றும். இதை மக்கள் அறிவியல் என்று சொல்லலாம்.”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமா...! அது எப்படி அறிவியல் வளர்ச்சியில், பறவைகள் அல்லது இயற்கைப் பாதுகாப்பில் பங்கு வகிக்கின்றது?”

“நாம் பார்க்கும் பறவையின் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்தால் அதுவொரு முக்கியமான தரவு. உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் `பாறு கழுகி’ன் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். eBird, wikipedia போன்ற இணையதளங்களில் பதிவேற்றினால் அதுவே ஆவணமாகும். அந்தத் தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு கழுகு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.

சிட்டுக்குருவி போன்ற பறவைகள் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இதுபோன்ற திட்டங்கள் உதவுகின்றன. ஒரு பகுதியின் பறவைகளைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து eBird-ல் பதிவேற்றுவதன் மூலமாக அப்பகுதியின் பறவைகள் குறித்த தரவுகள் கிடைக்கும். எதிர்காலத்தில் ஒருவேளை குறைந்துபோனதென்றால் அதை அறிந்துகொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம். மேலும், சூழல் மாற்றங்களை மனிதர்கள் அறிந்துகொள்ளவும் இது உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

பறவைகளுக்குக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு அதிகம். அதைவைத்து நமக்கு எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதையும் நம்மால் அறியமுடியும். பூமி சூடாதல், காலந்தவறிப் பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது. வெப்பநிலை உயர்வால் வனப்பகுதிகளில் வசிக்கும், வலசை வரும் பல பறவைகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. உதாரணமாக, ஒரு பழந்திண்ணிப் பறவை வகை, வலசை சென்ற இடத்திலிருந்து கிளம்பிக் கூடமைக்கும் இடத்திற்குச் செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்துக் காய்த்துப் பழுத்து ஓய்ந்துவிடுகிறது. அங்கு வரும் அப்பறவைகளுக்குப் போதுமான உணவு கிடைக்காது. அவை அங்கே செல்வது கூடமைத்துத் தம் இனத்தைப் பெருக்க. ஆனால், போதிய உணவு கிடைக்காமல் சில பறவைகள் கூடமைக்காமல் போகலாம். அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்குச் சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்துபோகலாம்.

அதற்குக் காரணம் அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையில் நடைபெறும் மாற்றங்கள். அந்த மாற்றங்க ளுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய வேண்டும். மக்கள் பதிவேற்றும் தரவுகளை வைத்து ஆய்வுமாதிரி ஒன்றை உருவாக்கி பிரச்னைக்கான காரணங்களையும் அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.”

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

“சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அறிவியல்பூர்வமாக ஆதாரமற்றவற்றை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது? இந்தப் போலி அறிவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா?”

“நிச்சயமாக. ஆய்வாளர்கள்  இந்த விஷயத்தில் அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும்.”

“2.0 படம் பற்றிய உங்கள் கருத்து?”

“ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்து விடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கெனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.”

- க.சுபகுணம்