பெரும் பூநாரைகள் Greater flamingos

உலகில் ஆறு வகையான பூநாரைகள் உள்ளன. அவற்றில், இரண்டு வகைகள் தமிழகத்துக்கு வலசையாக வருபவை. அதிக உப்புத்தன்மையான நீர்நிலைப் பகுதியில் வசிக்கும். திருநெல்வேலியின் கூந்தன் குளத்தில் இவற்றை அதிகம் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் மிக அதிகமாகக் காணப்படும். ஈரமான களிமண்ணால் கூடு கட்டி குஞ்சு பொரிப்பவை. சிவந்த கால்களும் நீண்டு வளைந்த கழுத்தும் இவற்றுக்குக் கொள்ளை அழகு தரும்.

மலபார் பாத இருவாச்சி Malabar pied hornbill

இருவாச்சி இனத்தின் ஒரு வகை. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். பழங்கள், சிறு பறவைகள், பூச்சிகள், ஊர்வன போன்றவை இவற்றின் உணவு. சுமார் 40 ஆண்டுகள் வாழக்கூடிய பறவை. உலகில் 52 வகையான இருவாச்சிகள் உள்ளன. இந்தியாவில் 9 வகைகள் உள்ளன. இது, கேரளாவின் மாநிலப் பறவை.

நெடுவயல் நெட்டைக்காலி paddyfield pipit

பார்ப்பதற்குக் குருவிகள் போன்றிருந்தாலும், வாலாட்டி வகையைச் சார்ந்தவை. உடல் பகுதியில் சாம்பல் பழுப்பு நிறமும், அடிப்புறத்தில் வெளிர் நிறமாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலான விஷயம். திறந்தவெளிகளில் அதிகமாகக் காணப்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் அதிகம் உள்ளன. ஓடும் திறன்கொண்ட இவற்றால், அதிக நேரம் பறக்க இயலாது. சிறிய பூச்சிகள் மட்டுமே பிரதான உணவு.

நீளவால் தாழைக்கோழி Pheasant-tailed Jacana

தாமரை மற்றும் அல்லி படர்ந்துள்ள நீர்நிலைகளிலும், நன்னீர் பகுதிகளிலும் வாழக்கூடியவை. கால் விரல்களில் சவ்வு இல்லையென்றாலும், மிக அருமையாக நீந்தக்கூடியவை. தென் ஆசிய பகுதிகள், இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வாழ்பவை. வெட்டுக்கிளி மற்றூம் நீரில் உள்ள சிறு பூச்சிகளை உண்பவை. 3 முதல் 4 வரையிலான முட்டைகளை இடும். குஞ்சுகள் ஆண் பறவையின் அரவணைப்பில் வளரும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க தந்தையின் இறகினுள் ஒளிந்துகொள்ளும்.

புள்ளி மூக்கு கூழைக்கடாspot billed pelican

கூழைக்கடா வகையில் இதுவும் ஒன்று. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இதன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். முக்கிய உணவு, மீன்கள். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரை தேடும். நீருக்கடியில் சுமார் ஓர் அடி ஆழத்தில் நீந்திச்சென்று கூர்மையான பார்வைத்திறனால் மீன்களைப் பிடிக்கும். சிறிது தூரம் தண்ணீரில் ஓடி, பிறகு ‘டேக் ஆஃப்’ எடுத்துப் பறக்கும்.

- ரா.கௌசல்யா