Published:Updated:

`எஜமானை கடிக்க வந்த பாம்பு; காப்பாற்ற உயிரைவிட்ட நாய் - தஞ்சை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`எஜமானை கடிக்க வந்த பாம்பு; காப்பாற்ற உயிரைவிட்ட நாய் -  தஞ்சை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
`எஜமானை கடிக்க வந்த பாம்பு; காப்பாற்ற உயிரைவிட்ட நாய் - தஞ்சை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

`எஜமானை கடிக்க வந்த பாம்பு; காப்பாற்ற உயிரைவிட்ட நாய் - தஞ்சை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் அருகே தன்னை வளர்த்த எஜமானரை கடிக்க வந்த பாம்பிடம் சண்டை போட்டு உயிரை விட்டுள்ளது அந்த வீட்டு வளர்ப்பு நாய். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தஞ்சாவூர் அருகே  உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர்  நடராஜன். இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.விவசாயியான இவர் வீட்டில் மாடு,கோழி, நாய் போன்றவற்றை செல்லபிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். தன் நாய்க்கு பப்பி என்ற பெயர் வைத்து கடந்த நான்கு ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் பப்பி மீது அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளனர். எப்போதும் வீட்டுக்குள்ளும், வெளியிலும் பப்பிக்கு என தனியாக நாற்காலி போட்டு அதில் உட்கார வைத்து ராஜமரியாதை கொடுப்பார்கள். அந்த நாய் இரவு நேரத்தில் முழு வேட்டைகாரனாக மாறி அந்த குடும்பத்திற்கே பாதுகாப்பாய் இருக்கும். பெரும்பாலும் இரவு நேரங்களில் வீட்டு வாசலில் தான் பப்பியை கட்டி வைத்திருப்பார்கள்.

நடராஜன் தினமும் காலை பப்பியை அழைத்துக்கொண்டு தன்னுடய தோட்டத்தில் நடைபயிற்சி செய்வார். அதேபோல் இன்றும்  தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்துள்ளது. அதனை பார்த்த நடராஜன் அதிர்ச்சி அடைந்து  நகராமல் அப்படியே நின்றிருக்கிறார். ஆனால் அந்த பாம்பு சீறியபடி நடராஜனை கடிப்பதற்காக வேகமாக வந்தது. இதனை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பை  அருகில் வர விடாமல் கடிக்க தொடங்கியது. பாம்பை அடிப்பதற்காக நடராஜன் குச்சியை எடுக்க சென்றுள்ளார். அதற்குள் பாம்புக்கும், நாய்க்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது. இறுதியில் நாயின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாம்பு அருகில் இருந்த முட்புதருக்குள் சென்றது. அப்போதும் விடாத நாய், பாம்பை வெளியில் இழுத்து கடித்து குதறியுள்ளது. இதில் பாம்பு உயிரிழந்துவிட்டது. 

.

உடனே நாயை தூக்கி கட்டிகொண்டு முத்தமிட்ட நடராஜன் வீட்டுக்கு சென்றவர் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறினார். அவர்களும் பப்பியை பாராட்டி தட்டி கொடுத்தனர். அப்போது பப்பி கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து போவதை கவனித்த குடும்பத்தினர், உடனடியாக கால்நடைமருத்துவருக்கு தகவல் கொடுத்தனர் ஆனால் மருத்துவர் வருவதற்குள் நாய் இறந்துவிட்டது. இதனை கண்ட நடராஜன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். பப்பியின் உயிரிழப்பினால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

இது குறித்து நடராஜனிடம் பேசினோம், “பப்பியை எங்க வீட்டின் மூன்றாவது  பிள்ளையாக வளர்த்தோம்.கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்காமல் துறு துறு என ஓடி கொண்டே இருப்பான் பப்பி.அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது என பெரும்பாலும் அவனை கட்டி போட்டே வைத்திருப்போம்.எங்க வீட்டை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.மூன்று முறை வீட்டிற்குள் பாம்பு வர இருந்த பாம்பை குறைத்து விரட்டி எங்களை காப்பாற்றியது. இன்றைக்கும் என்னை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றி சண்டையிட்டு எனக்காக அவன் உயிரை விட்டிருக்கிறான் .அவன் இல்லாமல் இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை” என கலங்கி துடித்தார்.மனிதர்களுக்குள்ளேயே அன்பும் நன்றியும் குறைந்து கொண்டிருக்கும் இந்த அவசரயுகத்தில்  தனக்கு மூன்று வேளை உணவு கொடுத்த எஜமானருக்கு ஆபத்து ஏற்பட்டதும் தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய பப்பியை நினைத்து  அப்பகுதியை சேர்ந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு