Published:Updated:

‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி
‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

ஆம்பூர் அருகே தினமும் பாய் தலையணையில் தூங்க அடம்பிடிக்கும் அதிசய கன்றுக்குட்டி ஒன்று இட்லி சாப்பிடும் அழகைப் பார்த்து பொதுமக்கள் வியந்துபோகின்றனர்.

‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் பசுமாடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளைக்கன்று ஒன்றை ஈன்றது. இந்தக் கன்றுக்குட்டியைப் பிள்ளையைப்போல் அன்பு செலுத்தி ஆனந்தனின் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர். கன்றுக்குட்டி மாட்டுத் தொழுவத்தில் தாய்ப் பசுவுடன் இருக்காமல் வீட்டுக்குள் ஆனந்தனின் குழந்தைகளிடம் விளையாடுகிறது. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. 

‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

வீட்டு ஹால் அல்லது அறையில் பாயை விரித்துப் போட்டால் தலையணையில் தலையை வைத்து நீண்டு படுத்து தூங்குகிறது. மின்விசிறியைப் போடாமல் இருந்தால் தூங்காமல் அடம்பிடிக்கிறது. மற்ற நேரங்களில் டி.வி-யில் பாட்டுப் போட்டுவிட்டால் தலையை ஆட்டுகிறது. எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்தக் கன்றுக்குட்டிக்கு ‘வேலவன்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆனந்தனின் குடும்பத்தினர் சாப்பிடும்போது, ஒரு தட்டில் இட்லி வைத்துக்கொடுத்தால் கன்றுக்குட்டியும் சாப்பிடுகிறது. 

‘தலையணைக்காக அடம்பிடிக்குது; தினமும் இட்லி சாப்பிடுது!’- வியக்கவைக்கும் அதிசய கன்றுக்குட்டி

இதுபற்றி உரிமையாளர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, ‘‘கன்றுக்குட்டியைச் செல்லப்பிராணியாக வளர்த்துவருகிறேன். வீட்டுக்குள்தான் எப்போதும் இருக்கும். எங்களில் ஒருவனாக இருப்பதால் கன்றுக்குட்டிக்கு ‘ஆதார்’ கார்டு வாங்குங்கள் அப்பா... என்று குழந்தைகள் என்னிடம் சொல்வதைக் கேட்கும்போது நெகிழ்ந்துவிடுகிறேன்’’ என்றார். ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆனந்தன் வீட்டுக்குச் சென்று ஆச்சர்யப்படுத்தும் இந்தக் கன்றுக்குட்டியைப் பார்த்துக் கொஞ்சி மகிழ்கிறார்கள்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு