Published:Updated:

ஒரு குரங்குக்குட்டியைக் கொன்ற நாய்கள்; 250 நாய்க்குட்டிகளைக் கொன்று பழிதீர்த்த குரங்குக்கூட்டம்!

நாயை தூக்கி செல்லும் குரங்கு
News
நாயை தூக்கி செல்லும் குரங்கு

குரங்குகள் நாய்களைப் பழிவாங்குவதைப் பார்த்த மக்கள் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். அவர்களால் ஒரு குரங்கைக்கூட பிடிக்க முடியவில்லை. பொதுமக்கள் தங்களின் நாய்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள லவோல் என்ற கிராமத்தில் சமீப காலமாக அங்குள்ள குரங்குகள் அடிக்கடி அக்கிராமத்தில் உள்ள நாய்களைத் தூக்கிச் சென்று உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கி போட்டு கொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நாய்களைக் குரங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொலை செய்துள்ளன.

Monkey (Representational Image)
Monkey (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து அந்தக் கிராம மக்களிடம் கேட்டதற்கு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாய் ஒன்று குரங்குக்குட்டியைக் கடித்துக் கொன்றுவிட்டது. அதிலிருந்து குரங்குகள் அனைத்தும் கண்ணில் படும் நாய்களை அப்படியே தூக்கிச் சென்று மரம் அல்லது கட்டடத்தின் உச்சியில் இருந்து கீழே தூக்கிப்போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இதனால் கிராமத்தில் இப்போது நாய்களையே பார்க்க முடிவதில்லை என்று தெரிவித்தனர். குரங்குகள் நாய்களை பழிவாங்குவதைப் பார்த்த மக்கள் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். அவர்களால் ஒரு குரங்கைக்கூட பிடிக்க முடியவில்லை. பொதுமக்கள் தங்களது நாய்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் குரங்குகள் தூக்கிச்சென்ற நாய்களைக் காப்பாற்ற சென்று கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

நாயை தூக்கி செல்லும் குரங்கு
நாயை தூக்கி செல்லும் குரங்கு

இது குறித்து சீதாராம் என்பவர் கூறுகையில், ``என் நாயைக் குரங்கு ஒன்று தூக்கிச் சென்றுவிட்டது. நான் குரங்கிடமிருந்து என் நாயைக் காப்பாற்றிவிட்டேன். ஆனால், என் நாயைக் காப்பாற்ற இப்போது நாயின் காலை உடைத்து வீட்டுக்குள் வைத்திருக்கிறேன்" என அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தெரிவித்திருக்கிறார். இப்பிரச்னைக்கு என்ன தீர்வு காண்பது என்று தெரியாமல் கிராம மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.