Published:Updated:

``விஷம் வைத்து கொல்லப்பட்டதா 45 குரங்குகள்''?! இறப்பில் நிலவும் மர்மம்!

monkey ( pixabay )

சில சமயங்களில் குரங்குகள் வாழைப்பழத் தோட்டங்களை நாசம் செய்வதால் வேண்டுமென்றேகூட இதை யாரோ செய்திருக்கலாம்.

``விஷம் வைத்து கொல்லப்பட்டதா 45 குரங்குகள்''?! இறப்பில் நிலவும் மர்மம்!

சில சமயங்களில் குரங்குகள் வாழைப்பழத் தோட்டங்களை நாசம் செய்வதால் வேண்டுமென்றேகூட இதை யாரோ செய்திருக்கலாம்.

Published:Updated:
monkey ( pixabay )

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிலகம் கிராமத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில், திங்கள்கிழமையன்று குரங்குகள் இறந்து கிடந்துள்ளன. அதீத துர்நாற்றம் வருவதை உணர்ந்த கிராம மக்கள் அப்பகுதிக்குச் செல்கையில், 45 குரங்குகள் இறந்து கிடந்துள்ளன. உடனடியாக இந்தச் செய்தியை வனத்துறை யினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

``விஷம் வைத்து கொல்லப்பட்டதா 45 குரங்குகள்''?! இறப்பில் நிலவும் மர்மம்!
pixabay

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், குரங்குகள் அனைத்தும் விஷம் உண்டதால் இறந்துபோய் இருக்கலாம் என யூகித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ண நாயுடு தெரிவிக்கையில், ``சிலகம் கிராமத்தின் சாலைக்கு அருகில் குரங்குகளின் இறந்த சடலங்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அந்தக் குரங்குகள் வேறு எங்கோ கொல்லப்பட்டு, சடலங்கள் இங்கு வீசப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தப் பகுதியில் குரங்குகள் அரிதாகவே காணப்படும் எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சிலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மன்டசா பகுதியில் குரங்குகள் காணப்படுகின்றன. இது போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை நாங்கள் கண்டதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

கிராம வாசிகள் கூறுகையில், ``குரங்குகள் விஷம் செலுத்தப்பட்ட வாழைப் பழங்களைத் தின்றதால் இறந்திருக்கலாம் அல்லது சில சமயங்களில் குரங்குகள் வாழைத் தோட்டங்களை நாசம் செய்வதால் வேண்டுமென்றேகூட இதை யாரோ செய்திருக்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

``விஷம் வைத்து கொல்லப்பட்டதா 45 குரங்குகள்''?! இறப்பில் நிலவும் மர்மம்!
pixabay

குரங்குகளின் இறப்பில் தொடர்ந்து மர்மம் நிலவுவதால், இறப்பின் உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின் அறியப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் பின் குரங்குகளின் உடல்கள் காவல் துறையினரால் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்படும்.

மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விலங்குகள் மீதான வன்முறையைத் தடுக்கும் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சுற்றியுள்ள கிராமங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.