Published:Updated:

கோவையில் காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை

Vikatan Correspondent
கோவையில் காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை
கோவையில் காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை
கோவையில் காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை

கோவை அருகே உள்ள பெரிய தடாகத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மயங்கி விழுந்தது. இதை பார்த்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

அந்த யானைக்கு வெல்லம், கருப்பட்டி, உப்பு, வாழைப்பழம் போன்ற உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும், குளுகோஸும் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. 2வது நாளாக யானை உணவுகளை எடுத்துக் கொண்டாலும்,  இன்னும் எழும்ப முடியவில்லையாம். யானையை எழுந்திருக்க வைக்க கும்கி யானைகளும் களம் இறக்கப்பட்டுள்ளன.