Published:Updated:

தண்ணீருக்காகத் தவித்த யானை சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

கோயம்புத்தூர் மாவட்டம், ஆணைகட்டி பகுதியில் தூமனூர் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் பல்வேறு விதமான பறவைகள், விலங்குகள் வசிக்கின்றன. ஏராளமான யானைகளும் அந்த வனத்தில் வசிக்கின்றன. கடுமையான வெயில் மற்றும் வறட்சியின் காரணமாக விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தண்ணீருக்காகத் தவித்த யானை சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

இதனால் விலங்குகள் தண்ணீருக்காக வெளியில் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நேற்று தூமனூர் வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க யானை தண்ணீர் குடிக்க அலைந்துள்ளது. அப்போது, அந்த யானை சேற்றில் சிக்கியது. சேற்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தும் கால் இறுக்கமாக மாட்டிக் கொண்டதால் யானையால் தப்பிக்க முடியவில்லை. இன்று காலை அந்த யானை உயிரிழக்க நேரிட்டது. அதன் பின்னர்தான் யானை சேற்றில் சிக்கியிருப்பதை வனத்துறையினர் கவனித்துள்ளனர். பிறகு சேற்றில் இருந்து யானையை மீட்ட வனத்துறையினர் அங்கேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

அடுத்த கட்டுரைக்கு