Published:Updated:

பரவும் பன்றிக் காய்ச்சல்; பன்றிகள் இறக்குமதிக்குத் தடை விதித்த மிசோரம் மாநிலம்!

வெண் பன்றி

தற்போது மீண்டும் மிசோரத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து சுமார் 384 பன்றிகளின் இறப்பு பதிவாகி உள்ளதால் அடுத்த உத்தரவு வரும் வரை பன்றி இறைச்சி இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப் பட்டுள்ளது.

பரவும் பன்றிக் காய்ச்சல்; பன்றிகள் இறக்குமதிக்குத் தடை விதித்த மிசோரம் மாநிலம்!

தற்போது மீண்டும் மிசோரத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து சுமார் 384 பன்றிகளின் இறப்பு பதிவாகி உள்ளதால் அடுத்த உத்தரவு வரும் வரை பன்றி இறைச்சி இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப் பட்டுள்ளது.

Published:Updated:
வெண் பன்றி

மிசோரம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பன்றிகள் மற்றும் பன்றியின் இறைச்சி இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து உயிருள்ள பன்றிகள், பன்றியின் இறைச்சி, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் செய்யப்படும் அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பன்றி
பன்றி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் மிசோரம் மாநில கால்நடை பராமரிப்புத் துறை தொடர் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது. அதன்படி பன்றி வளர்க்கும் இடங்களில் நோய்த்தொற்று நீக்கம் செய்வது, சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக்குவது, சந்தேகத்துக்கிடமான பன்றிகளைத் தனிமைப்படுத்துவது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பன்றிகளைப் பாதுகாப்பாக அகற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020 ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி மிசோரத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அப்போது பன்றி இறைச்சி மற்றும் பன்றிப் பொருள்களின் மீதான தடை விதிக்கப்பட்டது. இந்த நோய்த்தொற்றில் 33,417 பன்றிகள் பலியானதோடு 10,910 பன்றிகள் தொற்று நோய்ப் பரவலைத் தடுப்பதற்காகக் கொல்லப்பட்டது. இதில் 60.82 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் வரை இந்த நோய்த்தொற்றால் பன்றிகள் பலியாகவில்லை என்பதால் பிப்ரவரி மாதம் இந்தத் தடை உத்தரவு அகற்றப்பட்டது.

கொல்லப்பட்ட பன்றி
கொல்லப்பட்ட பன்றி

தற்போது மீண்டும் மிசோரத்தின் 5 மாவட்டங்களில் சுமார் 384 பன்றிகளின் இறப்பு பதிவாகியுள்ளதால், அடுத்த உத்தரவு வரும் வரை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகள், பன்றியின் இறைச்சி இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism