Published:Updated:

பிரமாண்ட தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா யானை? குற்றவாளியை நெருங்கும் வனத்துறை!

யானை தந்தம்
யானை தந்தம்

உடுமலை வனச்சரகம் கரட்டூர் பிரிவு உடைந்த பாலம் அருகே ஓர் பாறை இடுக்கில் உர சாக்கு பை ஒன்றை கண்டறிந்துள்ளனர். அதை எடுத்து பார்த்தபோது திருடப்பட்டிருந்த யானை தந்தம் இருந்தது தெரியவந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் காட்டுப்பட்டி அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓர் ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த யானையின் ஒற்றை தந்தம் திருடப்பட்டிருந்தது. இதனால், தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்
தஞ்சாவூர்: 50 டன் கொண்ட ஒரே கல்லில் யானை, குதிரைச் சிலைகள்... கவனம் ஈர்த்த ஐயனார் கோயில் விழா!

இதையடுத்து சிறப்புக் குழு அமைத்து வனத்துறையினர் தேடுதல் விசாரணையில் இறங்கினர். சிறப்புக் குழுவினர் தொடர்ந்து ரோந்துப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், உடுமலை வனச்சரகம் கரட்டூர் பிரிவு உடைந்த பாலம் அருகே ஓர் பாறை இடுக்கில் உர சாக்கு பை ஒன்றை கண்டறிந்துள்ளனர். அதை எடுத்து பார்த்தபோது திருடப்பட்டிருந்த யானை தந்தம் இருந்தது தெரியவந்துள்ளது.

யானை தந்தம்
யானை தந்தம்

அந்தத் தந்தம் 1.5 மீட்டர் நீளம், 15 கிலோ எடையுடன் மிக பிரமாண்டமாக இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்தி வருகிறோம். யானை உயிரிழந்த 6 கி.மீ தொலைவில் தந்தத்தை மீட்டுள்ளோம். கை ரேகை தடயங்கள் உள்ளிட்டவை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

யானை தந்தம்
யானை தந்தம்
யானை தந்தம் கடத்தல்: வனத்துறையை ஏமாற்ற வழியை மாற்றிய கும்பல்; சிக்கியது எப்படி?

குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு