Published:Updated:

சிறுமலையில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு! பழனி புஸ் ப்ரவுன் உள்பட 129 வகை இன பட்டாம்பூச்சிகள்... 

பழனி புஸ் ப்ரவுன் இன பட்டாம்பூச்சி

இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்த ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (36), ப்ளூஸ் (39), மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22) இருந்தன. இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கிய தன்மையைக் காட்டுகிறது...

சிறுமலையில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு! பழனி புஸ் ப்ரவுன் உள்பட 129 வகை இன பட்டாம்பூச்சிகள்... 

இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்த ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (36), ப்ளூஸ் (39), மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22) இருந்தன. இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கிய தன்மையைக் காட்டுகிறது...

Published:Updated:
பழனி புஸ் ப்ரவுன் இன பட்டாம்பூச்சி

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஏராளமான பட்டாம்பூச்சி வகைகள் குடியேறத் தொடங்கியுள்ளன.  சிறுமலையில் 120 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன. குறிப்பாக நிம்பாலிடே குடும்பத்தைச் சேர்ந்த டைகர், க்ரோ போன்ற பட்டாம் பூச்சிகள் இடம்பெயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி

இதனால், கோவை இயற்கை சொசைட்டி அமைப்பினர் அனுமதி கோரியதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை இணைந்து பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு எடுக்க திட்டமிடப்பட்டது. வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் சிறுமலையில் உள்ள 9 வழித்தடங்களில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பை நடத்தினர். 

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபுவிடம் பேசினோம். இந்த பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு திண்டுக்கல் மண்டலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் சதீஸ் ஆலோசனையின்படி நடத்தப்பட்டது. இயற்கை மற்றும் பட்டாம்பூச்​​சி அமைப்பு (டிஎன்பிஎஸ்) கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங்கிணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள்
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள்

கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது, இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக் காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளன.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி

இந்த மலையானது அதன் சுவையான வாழைப்பழத்திற்காக மட்டுமே பிரபலமாக அறியப்பட்டாலும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் இதமான வானிலைையுடன் கொண்டுள்ளது.

சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன்,'' ஐ.டி.பி-2 வனச்சரக அலுவலர் சிவா மற்றும் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்புடன் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தினர். இரண்டு நாட்கள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சிறுமலையில் 129 இன பட்டாம்பூச்சிக்கள் கண்டறியப்பட்டன. 

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி

இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்த ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (36), ப்ளூஸ் (39), மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22) இருந்தன.  இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கிய தன்மையைக் காட்டுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பழனி மலைகளுக்குச் சொந்தமானதாக அறியப்படும் நிம்ஃபாலிடே இனத்தைச் சேர்ந்த பழனி புஸ் ப்ரவுன் இனத்தைப் பார்ப்பது இந்த ஆய்வின் சிறப்பம்சங்களில் அடங்கும். இந்த இனம் சிறுமலையின் உயரமான பகுதிகளில் நிறைய காணப்படுகிறது.

கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள்
கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள்

மேலும், தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. எதிர்கால ஆய்வுகளானது பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்றார்.