Published:Updated:

வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு; குடும்பத்தைக் காப்பாற்றிய பூனை... எப்படித் தெரியுமா?

பூனை ( pixabay )

திடீரென வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது. அதைக் கண்ட பூனை, தாவிச்சென்று பாம்பைப் பிடித்து கடித்து குதறிச் சண்டையிட்டுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு; குடும்பத்தைக் காப்பாற்றிய பூனை... எப்படித் தெரியுமா?

திடீரென வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது. அதைக் கண்ட பூனை, தாவிச்சென்று பாம்பைப் பிடித்து கடித்து குதறிச் சண்டையிட்டுள்ளது.

Published:Updated:
பூனை ( pixabay )

வளர்ப்பு பிராணிகள் தங்களுடைய எஜமானர்கள் மீது பாசமாக மட்டும் இருப்பதில்லை... அவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆபத்து நேர்கையில், அதை எதிர்கொண்டு விரட்டியடிக்கவும் செய்கிறது. அப்படி பூனை ஒன்று, விஷம் நிறைந்த பாம்பிடம் இருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாம்பு - மாதிரிப்படம்
பாம்பு - மாதிரிப்படம்
Shahid Shaikh

பெரம்பலூர், அரணாரை வடக்கு தெருவில் வசித்து வருபவர்தான் 55 வயதான சிவக்குமார். இவர் விவசாயி. தன்னுடைய வீட்டில் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நவம்பர் 20-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால், வீட்டில் குடும்பத்தாருடன் இருந்துள்ளார். அவர், அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து பகல் 11 மணியளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வீட்டிற்குள் அதிக விஷத் தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது.  அதைக்கண்ட அவர்களது பூனை, தாவிச்சென்று பாம்பைப் பிடித்து கடித்துக்குதறி சண்டையிட்டுள்ளது. 

Cat (Representational image)
Cat (Representational image)
pixabay

பூனையின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அங்கே விரைந்து சென்றுள்ளனர். பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பைக் கடித்து தூக்கிச் சென்றுள்ளது பூனை.  அக்கம் பக்கத்தில் விஷயம் தெரிய, பலரும் வந்து குடும்பத்தினரை நலம் விசாரிப்பதோடு, பூனையையும் பார்த்துச் செல்கின்றனர்.

விஷம் நிறைந்த பாம்புடன் சண்டையிட்ட போதும், பூனைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.