Published:Updated:

அஸ்ஸாம் யானைகள் சரணாலயத்தில் நிலக்கரி சுரங்கத்துக்கு மீண்டும் அனுமதி; யானைகள் நிலை என்ன?

Mining (Representational Image) ( Photo by Tom Fisk from Pexels )

டெஹிங் பட்காய் தேசிய பூங்காவானது நிலக்கரி மற்றும் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட அஸ்ஸாமின் திப்ருகர் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் உள்ளது. இந்த பூங்கா ஜூன் 2004 அன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2021-ல் அஸ்ஸாமின் வனத்துறை இதைத் தேசிய பூங்காவாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அஸ்ஸாம் மாநிலம் டெஹிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தில், சட்டவிரோதமாகச் சுரங்கப் பணிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தததால், சுரங்கப் பணிகள் ஜூன் 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு அஸ்ஸாமின் டெஹிங் பட்காய் யானைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியில் மீண்டும் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுரங்கப் பணிகளை மார்ச் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

Mining (Representational Image)
Mining (Representational Image)
Pexels

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெஹிங் பட்காய் தேசிய பூங்காவானது நிலக்கரி மற்றும் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட அஸ்ஸாமின் திப்ருகர் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் உள்ளது. இந்த பூங்கா ஜூன் 2004 அன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2021 அன்று அஸ்ஸாமின் வனத்துறை இதைத் தேசியப் பூங்காவாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தேசியப் பூங்காவின் பரப்பளவு 937 சதுர கி.மீ. இந்த டெஹிங் பட்காய் யானைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். சட்டவிரோதமாக இப்பகுதியில் சுரங்கப் பணிகள் நடைபெற்றதால் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டன.

யானைகள்
யானைகள்
elephants

தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது, வடகிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம்.

தற்போது டெஹிங் பட்காய் யானைகள் சரணாலயத்தில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism