Published:Updated:

தேனுக்காக மரம் ஏறி சிக்கிக்கொண்ட கரடி; மரத்தை சாய்த்து மீட்ட வனத்துறை!

கரடி
கரடி

கோவை வால்பாறை அருகே மரத்தில் சிக்கிய கரடியை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை ஆனைமலை புலிகள் காப்பகம் , வால்பாறை வனசரகம், அருகே உள்ள ஓர் தேயிலை தோட்டத்தில் கரடி மரத்தில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தது. இதையடுத்து, தேயிலை தோட்டத்தில் இருந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வால்பாறை
வால்பாறை
கள் இறக்கும் போட்டியில் கொலை; கரடி தாக்கியதாக நாடகம்; ஒரு வருடத்துக்குப் பின் வெளிவந்த உண்மை!

சிறிது நேரத்தில் வனத்துறை சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அந்த கரடியின் கை பகுதி மரத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

கரடி மரத்தில் ஏறி, அங்குள்ள தேனை எடுத்து சாப்பிட முயற்சி செய்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக கரடியின் கை பகுதி மரத்தின் கிளையில் மாட்டி வெளியே எடுக்க முடியாமல் வலியில் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.

கரடி
கரடி
யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத மின்வேலி; பரிதாபமாக உயிரிழந்த கரடி!

வனத்துறை அதிகாரிகள், வனகால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோரின் முயற்சியில் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு மரத்தின் அடிப்பகுதியை வெட்டி சாய்த்து கரடியை மீட்டனர். தொடர்ந்து, முதல் உதவி சிகிச்சைக்காக கரடியை வனத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கரடி
கரடி

``காயம் குணமானதும் கரடியை மீண்டும் வனப்பகுதியில் விட்டுவிடுவோம்” என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு